விவசாயிகள் கவலை சின்னமனூர் மாநில நெடுஞ்சாலையில் பூத்துக்குலுங்கும் மே பிளவர்

சின்னமனூர், மே 21: மாநில நெடுஞ்சாலையில் மே பிளவர் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. தேனி மாவட்டத்தில், மாநில தேசிய நெடுஞ்சாலைகளில் ஆண்டுக்கு ஒரு முறை மே பிளவர் என்ற கொன்றைப்பூக்கள் 2 மாதங்கள் பூத்துக் குலுங்கும்.  ஏப்ரல் இரண்டாவது வாரத்தில்  பூக்கத் துவங்கி மொட்டு  விட்டு மே மாத்தில் பூக்கள் விரிந்து மரமே சிவப்பாக கலர்புல்லாக காட்சியளிக்கும். மே மாதத்தில் துவங்கி ஜூன் மாதம் இரண்டாவது  வாரத்தில் பூக்கள் உதிர்ந்து  வெறும் இலைகளோடு மரம் மாறிவிடும். தற்போது இந்த பூக்கள் உத்தமபாளையம், போடிநாயக்கனூர் மாநில நெடுஞ்சாலையிலும் போடி முந்தல் சாலையில் துவங்கி தேனி சாலையிலும், சின்னமனூர் சீப்பாலக்கோட்டை சாலையிலும், சீலையம்பட்டியிலிருந்து வேப்பம்பட்டி சாலை காமாட்சிபுரம் வரை பூத்துக்  குலுங்குகின்றன. இதனால் இச்சாலைகள் சிவப்பு வண்ணம் பூசியது போல அழகாக காட்சி தருகின்றன.

Related Stories: