கோணம் அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்

நாகர்கோவில், மே 21:   நாகர்கோவிலில் இயங்கி வரும் அரசு கலை மற்றும் அறிவியில் கல்லூரியில் மாணவ, மாணவிகள் சேர்ந்து படிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். நாகர்கோவில் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலையில் ஆங்கிலம், பொருளியல், வணிகவியல், வரலாறு, வணிக நிர்வாகவியல் மற்றும் இளம் அறிவியலில் கணிதம், கணினி அறிவியல், புள்ளியியல், இயற்பியல் ஆகிய 9 பாடப்பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.

  2019-2020 கல்வியாண்டிற்கான மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கு விண்ணப்ப படிவங்கள் விநியோகம் கடந்த 22ம் தேதி தொடங்கியது. அன்று மட்டும் 545 விண்ணப்பங்களை மாணவ, மாணவிகள் வாங்கிச்சென்றனர். தொடர்ந்து மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் வந்து விண்ணப்பங்களை வாங்கினர். விண்ணப்ப விநியோகம் கடந்த 6ம் தேதியுடன் முடிவடைந்தது. மொத்தம் 1833 விண்ணப்பங்களை மாணவ, மாணவிகள் வாங்கி உள்ளனர். மேலும் அன்றைய தினமே கடைசி நாள் என்பதால் வாங்கிச்சென்ற விண்ணப்பங்களை மாணவ, மாணவிகள் விண்ணப்பித்தனர்.

 மேலும் சிபிஎஸ்இயில் படித்த மாணவ, மாணவிகள் அரசு கலைக்கல்லூரியில் சேரும் வகையில் விண்ணப்பம் விநியோகம் கடந்த 15ம் தேதி வரை நடந்தது. ஆனால் சிபிஎஸ்இ மாணவ, மாணவிகள் அரசு கலைக்கல்லூரியில் சேர ஆர்வம் காட்டவில்லை. குறைந்த அளவே விண்ணப்பங்களை மாணவ, மாணவிகள் வாங்கி சென்றனர். சுமார் 10 விண்ணப்பங்களை மட்டுமே மாணவ, மாணவிகள் வாங்கியதாக கூறப்படுகிறது. மாணவ, மாணவிகளுக்கு விநியோகம் செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாணவ, மாணவிகள் பூர்த்திசெய்து கல்லூரியில் விண்ணப்பித்து இருந்தனர்.

 இந்நிலையில் விண்ணப்பித்து இருந்த மாணவ, மாணவிகளை கல்லூரியில் சேர்ப்பது தொடர்பாக முதற்கட்ட கவுன்சிலிங் ஜூன் 3ம் தேதி தொடங்குகிறது. 3ம் தேதி தொடங்கும் முதற்கட்ட கவுன்சிலிங் 4, 6, 7 ஆகிய தேதிகளில் நடக்கிறது. போதிய மாணவர்கள் கல்லூரியில் சேரவில்லை என்றால், 2ம் கட்ட கவுன்சிலிங் 13, 14 ஆகிய தேதிகளிலும், 3ம் கட்ட கவுன்சிலிங் ஜூலை 7ம் தேதியிலும் நடத்தப்படும் என கல்லூரி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Related Stories: