தெரிசனங்கோப்பு தர நங்கை அம்மன் சாஸ்தா கோயில் காளிஊட்டு விழா

நாகர்கோவில், மே 21:  தெரிசனங்கோப்பு வெள்ளாளர் சமுதாய தர நங்கை அம்மன் சாஸ்தா கோயில் காளிஊட்டு விழா கடந்த 19ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. 19ம் தேதி காலையில் சிறப்பு தீபாராதனை, மாலையில் திருவிளக்கு பூஜை, இரவு சிறப்பு தீபாராதனை, மெல்லிசை விருந்து ஆகியவை நடந்தது. நேற்று (20ம் தேதி) காலையில் சிறப்பு தீபாராதனை, மாலையில் யானை பலி, சமயசொற்பொழிவு, இரவு குடியழைப்பு ஆகியவை நடந்தது. இன்று(21ம் தேதி) அதிகாலை 1 மணிக்கு சிறப்பு தீபாராதனை, 2 மணிக்கு வெள்ளிகலைமானில், சிங்காரி மேளம் மற்றும் ராஜ மேளத்துடன் அம்மன் பவனி வருதல் நடந்தது. காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், 7 மணிக்கு யானை மீது பால்குடம் பவனி வருதல் ஆகியவை நடக்கிறது.

மதியம் 12 மணிக்கு உச்சிபொலி சிம்ம வாகனத்தில் எழுந்தருளுதல் மஹா தீபாராதனை, 1 மணிக்கு அன்னதானம், இரவு 7 மணிக்கு போட்டி மேளம் ஆகியவை நடக்கிறது. இரவு 9 மணிக்கு அலங்கார தீபாராதனை, 10.30 மணிக்கு மேளதாளத்துடன் மதுக்குடம் பவனி வருதல், 12.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை, ஊட்டு படைத்தல் ஆகியவை நடக்கிறது. நாளை(22ம் தேதி) அதிகாலை 2 மணிக்கு இந்திரவாகனத்தில் அம்மன் பவனி வருதல், காலை 6 மணிக்கு சிறப்பு தீபாராதனை, மதியம் 12 மணிக்கு உச்சகாலபூஜை, மஞ்சள் நீராடுதல், இரவு 7 மணிக்கு சிறப்பு தீபாராதனை ஆகியவை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஊர் டிரஸ்ட் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

Related Stories: