பறக்கை வைரவநாதசுவாமி, முத்தாரம்மன் கோயில் கொடை விழா

நாகர்கோவில், மே 21:  பறக்கை வைரவநாதசுவாமி, முத்தாரம்மன் கோயில் கொடைவிழா நேற்று தொடங்கி நடந்து வருகிறது. நேற்று காலையில் கணபதிஹோமம், மாலையில் முரசு, நையாண்டிமேளம், நள்ளிரவில் குடியழைப்பு தீபாராதனை ஆகியவை நடந்தது. இன்று(21ம் தேதி) காலை 7 மணிக்கு முரசு, 7.30 மணிக்கு நையாண்டிமேளம், 8 மணிக்கு முரசு, 9.30 மணிக்கு வில்லிசை, 10.30 மணிக்கு சந்தனம் சாத்துதல், மதியம் 1.15 மணிக்கு உச்சிகால தீபாராதனை ஆகியவை நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு முரசு, 7.30 மணிக்கு நையாண்டிமேளம், இரவு 9 மணிக்கு வில்லிசை, நள்ளிரவு 1.30 மணிக்கு தீபாராதனை ஆகியவை நடக்கிறது. நாளை(22ம் தேதி) காலை 9 மணிக்கு நையாண்டிமேளம், கரகம், 10.30 மணிக்கு வில்லிசை, மாலை 4.30 மணிக்கு மஞ்சள் நீராடுதல் ஆகியவை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர்மக்கள் செய்து வருகின்றனர்.

Related Stories: