முத்தூர் ஒழுங்குமுறை கூடத்தில் ரூ.1.85 லட்சத்துக்கு தேங்காய் ஏலம்

வெள்ளகோவில்,மே 19:வெள்ளகோவில் அடுத்துள்ள முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையும் டெண்டர் முறையில் தேங்காய் ஏலம் நடைபெருகிறது. முத்தூர் சுற்று வட்டார விவசாயிகள் 100 பேர் நேற்று விற்பனை கூடத்திற்கு 25,680 தேங்காய்கள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஏலத்தில் முதல் தரம் ஒரு கிலோ ரூ.23.20க்கும், இரண்டாம் தரம் ஒரு கிலோ ரூ.15.35க்கும், சராசரி ரூ.21.05க்கும் ஏலம் போனது. 9டன் தேங்காய்கள் மொத்தம் ரூ.1லட்சத்து 85ஆயிரத்து 978 க்கு ஏலம் போனது என, விற்பனைகூட மேற்பார்வையாளர்  ஸ்ரீரங்கன் தெரிவித்தார்.

Related Stories: