மேற்குவங்கத்தில் வன்முறையை தூண்டி வரும் திரிணாமுல் காங்கிரசை தேர்தலில் இருந்து விலக்க வேண்டும் ஆந்திர பாஜ தலைவர் கோரிக்கை

திருமலை, மே 16: மேற்குவங்கத்தில் வன்முறையை தூண்டி வரக்கூடிய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை தேர்தலிலிருந்து விலக்க வேண்டும்  என்று ஆந்திர மாநில பாஜ தலைவர் கண்ணா லட்சுமி நாராயணா கோரிக்கைவிடுத்தார். விஜயவாடாவில் ஆந்திர மாநில பாஜ மாநில தலைவர் கண்ணா லட்சுமி நாராயணா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: மேற்குவங்கத்தில் நடைபெற்று வரும் வன்முறை சம்பவங்கள் ஜனநாயகத்தை சீர்குலைக்கும் விதமாக உள்ளது. அமித்ஷா மீது நடைபெற்ற தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கது. வன்முறை மூலமாக ஆட்சியை பிடிக்க வேண்டும் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி முயற்சி செய்து வருகிறார்.

எனவே, வன்முறையை தூண்டி வரக்கூடிய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை தேர்தலில் இருந்து விலக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை வைக்கிறோம். மாநிலக் கட்சிகள் ஆட்சிக்கு வந்த உடனேயே மாநிலம் முழுவதும் தங்களுக்கே சொந்தம் என்ற கற்பனையில் உள்ளனர். ஆந்திர மாநிலத்தில் தேர்தல் முடிவுக்குப் பிறகு பாஜ முக்கிய பங்கு வகிக்கும். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீது தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: