திருவண்ணாமலையில் அனல் காற்றில் பொதுமக்கள் அவதி

திருவண்ணாமலை, மே 14: திருவண்ணாமலையில் நேற்று 104 டிகிரி வெயில் வாட்டி வதைத்ததால் அனல் காற்றில் பொதுமக்கள் கடுமையாக அவதிப்பட்டனர். திருவண்ணாமலையில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்த ஆண்டு கடந்த மார்ச் மாதமே வெயில் கொளுத்த ஆரம்பித்துவிட்டது. அக்னி நட்சத்திரம் ெதாடங்கியதில் இருந்து திருவண்ணாமலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. நேற்று 104 டிகிரி வெயில் வாட்டி வதைத்தது.

வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுவதால் திருவண்ணாமலை நகரின் முக்கிய பகுதியாக திகழும் தேரடிவீதி, கடலைக்கடை சந்திப்பு, ரவுண்டானா, பெரியதெரு, திருவூடல்தெரு, பேகோபுர தெருக்களில் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.. வெயிலின் கொடுமை தாங்காமல் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கினர். நேற்று பகலில் அனல் காற்று வீசியது. நாளுக்கு நாள் திருவண்ணாமலையில் வெயிலின் கொடுமை அதிகரித்து வருகிறது.

வீட்டில் உள்ள எந்த பொருளை தொட்டாலும் சூடாகவே இருக்கிறது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நீச்சல் குளம், கிணறுகள், குளங்களில் குளித்து மகிழ்கின்றனர். குளிர்பான கடைகள், தர்பூசணி கடைகள், இளநீர் கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. வெயிலின் தாக்கமும் அனல் காற்றையும் தாங்கி கொள்ள முடியாத நடைபாதை வியாபாரிகள் குடைபிடித்தபடி வியாபாரத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: