அம்மாப்பட்டினம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஸ்கேன் வசதி செய்துதர வேண்டும் தவ்ஹீத் ஜமாத் வலியுறுத்தல்

மணமேல்குடி, ஏப்ரல் 22:  தவ்ஹீத் ஜமாஅத் புதுகை மாவட்ட அம்மாபட்டினம் கிளையின் செயற்குழு கூட்டம் நடந்தது.  மாவட்ட மருத்துவ அணி செயலாளர் முகம்மது சபீர்தீன் தலைமை வகித்தார். கிளை தலைவர் ஷேக் தாவூத், செயலாளர் பைரோஸ்கான் , பொருளாளர் முஹம்மது யூசுப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பேச்சாளர் ஜமால் உஸ்மானி, பேச்சாளர்  அப்துல்பாரி சிறப்புரையாற்றினர்.இதில், அம்மாபட்டினம் ஊராட்சிக்குட்பட்ட பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் சுற்றுச்சுவர் மிகவும் மோசமாக இருக்கிறது. மேலும் கழிப்பறை வசதியும் மோசமாகவும், நோய் தொற்றும் அளவிற்கு உள்ளது. இதனை சம்மந்தப்பட்ட துறை சரி செய்யுமாறு இந்த செயற்குழுவின் வாயிலாக கேட்டு கொள்கிறோம். மேலும் அம்மாபட்டினம் ஊராட்சியில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக இயங்கி வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 30க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து மக்கள் மருத்துவம் செய்து வருகின்றனர். குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் அதிக அளவில் (செவ்வாய்க்கிழமை மட்டும் 80க்கும் மேற்பட்ட மக்கள்) சிகிச்சைக்கு வருகின்றனர். இவர்களுக்கு ஸ்கேன் எடுப்பதற்காக அங்குள்ள மருத்துவர்கள் தனியார் மருத்துவமனைக்கு அவர்களை அனுப்புகின்றனர்.

இதனால் கர்ப்பிணிகள் கடுமையான பாதிப்புக்குள்ளாகி பொருளாதார ரீதியிலும் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர். இதை கருத்தில்கொண்டு சம்மந்தப்பட்ட நிர்வாகம் ஸ்கேன் கருவியை அம்மாபட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைக்குமாறு இந்த செயற்குழு வாயிலாக கேட்டுக்கொள்கிறோம். அம்மாபட்டினம் ரேஷன் கடைகளில் முறைகேடு நடப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் வருகிறது. இதனை சரியான பலமுறை சம்மந்தப்பட்ட துறைக்கு வலியுறுத்தியும் அது சரி செய்யப்படவில்லை. இதனை துரிதமாக சரி செய்யுமாறு சம்மந்தப்பட்ட துறையை இந்த செயற்குழுவின் வாயிலாக கேட்டு கொள்கிறோம் போன்ற தீர்மானங்கள் இதில் நிறைவேற்றப்பட்டன.செயற்குழுவில் அதிகமான தவ்ஹீத் ஜமாத் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: