புதுகை மன்னர் கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்

புதுக்கோட்டை, ஏப்.22: புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பில் சேர விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.புதுக்கோட்டையில் மன்னர் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் தமிழ், வரலாறு, பொருளியல், இயற்பியல், தாவரவியல், விலங்கியல், கணினி பயன்பாட்டியல், நிர்வாகவியல், உடற்கல்வி போன்ற இளநிலை பட்டப்படிப்புகளில் சேர ஆர்வம் உள்ள மாணவ, மாணவிகள் இன்று (திங்கட்கிழமை) முதல் வரும் மே மாதம் 10ம் தேதி வரை கல்லூரியில் உள்ள புதிய கலையரங்கில் உள்ள கணினி பதிவு மையத்தில் நேரில் வந்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்பும் மாணவ, மாணவிகள், பிளஸ்-1 மதிப்பெண் பட்டியல், பிளஸ்-2 மதிப்பெண் பட்டியல், மாற்றுச்சான்றிதழ், சாதிச்சான்றிதழ், ஆதார் கார்டு போன்ற சான்றிதழ்கள் மற்றும் அவற்றின் நகல்களுடன் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் கொண்டு வந்து விண்ணப்பிக்கலாம். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களை தவிர மற்ற மாணவர்கள் ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும் என கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: