அரிமளம், திருமயம் பகுதியில் மேற்படிப்பை தேர்ந்தெடுக்க ஆலோசனை வழங்கப்படுமா? கல்வியாளர்களுக்கு பெற்றோர் கோரிக்கை

திருமயம், ஏப்.22: அரிமளம், திருமயம் பகுதி பள்ளி மாணவர்கள் திறமைகேற்ற, எதிர்கால வேலைவாய்ப்பு தர கூடிய மேற்பட்டிப்பை தேர்ந்தெடுக்க அப்பகுதியில் உள்ள ஒவ்வொரு பள்ளியாக கல்வியாளர்கள் சென்று மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என அப்பகுதி பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா ஒரு பேரூராட்சி, இரண்டு ஒன்றியம், 65 கிராம பாஞ்சாயத்து, 400க்கும் மேற்பட்ட கிராமங்களை உள்ளடக்கியது. இங்குள்ள மக்களின் முக்கிய வாழ்வாதரமாக விவசாயம் உள்ளது. அனைத்து கிராமமும் வானம் பார்த்த பூமி என்பதால் மழை பெய்தால் மட்டுமே விவசாயம் இல்லையேல் கூலிவேலை தான். இந்நிலையில் கூலி வேலையும் திருமயம் தாலுகாவில் கிடைப்பதில்லை. இதனால் கூலி வேலைக்காக அருகேலுள்ள மதுரை, சிவகங்கை, திருச்சி ஆகிய மாவட்டங்களுக்கு சென்று வருகின்றனர். தற்போது திருமயம் தாலுகாவில் நிலவி வரும் வரலாறு காணாத கடும் வறட்சி அப்பகுதி மக்களை பெரும் சிரமத்திற்கு உள்ளாக்கி வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அன்றாட வாழ்க்கையை கடத்துவதற்கே பெரும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில்  கடந்த 25 ஆண்டுகள் இல்லாத வகையில் கடந்த சில ஆண்டுகளாக அப்பகுதி பெற்றோர்களிடையே குழந்தைகளை படிக்க வைப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.இதற்கு காரணம் தான் படிக்காமல் கூலி வேலைக்கு அலைவது போல தனது வருங்கால சந்ததிகள் அலைய கூடாது என்பதற்காக பெற்றோர்கள் குழந்தைகள் கஷ்டப்பட்டு படிக்க வைக்கின்றனர். இதனால் தங்களது குழந்தைகளின்  தொடக்க கல்வியை சொந்த கிராமங்களில் முடிக்க செய்து உயர்கல்விகாக அருகிலுள்ள பள்ளிக்கு அனுப்புகின்றனர்.அப்பள்ளிகளில் உயர்கல்வி முடிக்கும் குழந்தைகள் மேற்பட்டிப்பை தொடருவதில் எதை படித்தால் வேலை கிடைக்கும் என தொpயாமல் குழம்பி போய் உள்ளனர். மேலும் பெரும்பாலான மாணவர்கள் முதல் தலைமுறை பட்டதாரி என்பதால் திருமயம் பகுதி பெற்றோர்களுக்கு எதிர்காலத்தில் வேலை வாய்ப்பு தரும் மேற்படிப்பு பற்றி தொpவதில்லை.இதனால் சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பெரு நகரங்களில் உள்ள வேலை வாய்ப்பு கல்வி, சலுகைகள் மாணவர்களுக்கு தொpயாமல் எதையாவது ஒரு மேற்படிப்பை படித்துவிட்டு வேலை வாய்ப்பு இல்லாமல் வெட்டியாக ஊரை சுற்றும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகரித்த போதிலும் வேலை வாய்ப்பு படிப்புக்கேற்ற வேலை கிடைக்காமல் இல்லாததால் இளைஞர்கள், பெற்றோர்கள் விரக்தியடைந்துள்ளனர். மேலும் பெற்றோர்கள் கஷ்டபட்டு மேற்படிப்பு படித்த தனது குழந்தை வேலை வாய்பின்றி இருப்பதை பார்த்து மன உலச்சலடைகின்றனர். ஒரு சிலர் இங்கு படித்த படிப்புக்கு வேலை வாய்ப்பு இல்லாததை அறிந்து வெளி நாடுகளுக்கு அனுப்பிவிடுகின்றனர்.

எனவே திருமயம், அரிமளம் பகுதியில் உள்ள ஒவ்வொரு அரசு பள்ளிக்கும் கல்வியாளர்கள் சென்று பள்ளி படிப்பை முடித்து மேற்பட்டிப்பு செல்லும் மாணவர்களுக்கு தேவையான அறிவுரைகளை வழங்கி எதிர்காலத்தில் வேலை வாய்ப்பு தரும் படிப்;பை படிக்க அரிமளம், திருமயம் பகுதி மாணவர்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்பதே அப்பகுதி பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.இது பற்றி அரிமளத்தைச் சேர்ந்த ஒரு மாணவாpன் பெற்றோரிடம் கேட்டபோது: 2000ம் ஆண்டுகளில் கேட்டரிங் என்ற படிப்பு பிரபலமானது. இதனால் மாணவர்கள் கேட்டரிங் கல்வி நோக்கி சென்றனர். இதனை பயன்படுத்தி கொண்ட தனியார் கல்வி நிறுவனங்கள் ஆங்காங்கே கேட்டரிங் இன்ஸ்டியூட் திறந்து மாணவர்களை சேர்த்து கொள்ளை லாபம் பார்த்தனர். இதேபோல் ஆசிரியர் பட்டபடிப்பு, நர்சிங், இன்ஞ்னீரிங் படிப்புகள் பெருநகரங்களில் பிரபலமடைந்து கிராம பகுதி மாணவர்களை வந்தடையும் போது அந்த படிப்பின் மவுசு குறைந்துவிடுகிறது. இதனால் விளம்பரங்களை பார்த்து ஏமாந்த மாணவர்கள் கூட்டம் கூட்டமாக ஒரே படிப்பை தேர்ந்தெடுத்து தற்போது வேலை வாய்பின்றி கஷ்டப்படுகின்றனர்.இதற்கு முக்கிய காரணம் கிராமப்புற பெற்றோர்கள், மாணவர்களுக்கு மேற்பட்டிப்பு பற்றிய புரிதலின்மை. இதனை தனியார் கல்வி நிறுவனங்கள் நன்கு பயன்படுத்தி கொண்டு வருமானம் பார்க்கின்றனர். இதனிடையே நீட் தேர்வினால் மருத்துவ படிப்பு என்பது கிராமப்புற மாணவர்களுக்கு எட்டாகனியாகி விட்டது. இதனால் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்தாலும் அரசு பள்ளி மாணவர்கள் குறைந்த மதிப்பெண் எடுத்த தேர்ந்தெடுக்கும் பொறியியல் படிப்பை தான் படிக்க் வேண்டி உள்ளது. இதற்கு ஏன் கஷ்டபட்டு படிக்க வேண்டும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டனர்.

நீட் தேர்வில் வெற்றி பெற அரசு பயிற்சி வகுப்புகள் நடத்தினாலும் அவைகள் தனியார் பயிற்சி வகுப்புகளுக்கு இணையாக இல்லை என மாணவர்கள் குற்றம் சாற்றுகின்றனர். தனியார் நீட் பயிற்சி வகுப்புகளுக்கு மாணவர்களை அனுப்ப எங்கள் கிராமப்புற பெற்றோர்களுக்கு வசதியில்லை. இதனால் 12ம் வகுப்பு மாணவர்களிடையே படிப்பின் மீதுள்ள ஆர்வம் குறைந்துள்ளது என்றார்.எனவே மாணவர்களின் பள்ளி படிப்பு அறிவை வளர்ப்பதற்கும், பட்ட படிப்பு வாழ்க்கைக்கு தேவையான வேலை வாய்ப்பு தரும் கல்வியாக இருக்க அரசு உறுதி செய்ய வேண்டும். இல்லையென்றால் மேற்படிப்பு படித்த கிராமபுற மாணவர்களின் எதிர்கால வாழ்க்கை கேள்வி குறியாகிவிடும் என தெரிவித்தனர்.

Related Stories: