கட்டுமாவடி அழியாமொழி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

மணமேல்குடி, ஏப்.21: மணமேல்குடி அடுத்த கட்டுமாவடி அழியாமொழி அம்மன் கோயில் திருப்பணிகள் நடந்து கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடுகள் மும்முரமாக நடந்தது. முன்னதாக கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் முதல் கால பூஜை, இரண்டாம் கால பூஜை, மூன்றாம் கால யாக பூஜைகள் மண்டப சாந்தி, கோ பூஜை, பிம்ப சுத்தி, நான்காம் கால யாக பூஜைகள் நடைபெற்றன.

முக்கிய விழாவான மகா கும்பாபிஷேகம் கடந்த (18ம்தேதி) நடைபெற்றது.   அதனை தொடர்ந்து, கடம் புறப்பாடாகி கோயிலை வலம் வந்த பின்னர் காலை 10 மணிக்கு மூலவர் விமானத்துக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர், பரிவார தெய்வங்கள் உள்ள கோயில் விமானங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து, அம்மனுக்கும், பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழா ஏற்பாட்டை கட்டுமாவடி , செம்பியன்மகா தேவிபட்டினம், கணேசபுரம் ஆகிய மூன்று ஊர் கிராமத்தார்கள் செய்திருந்தினர்.

Related Stories: