வாக்களித்து கடமையாற்றிய 104 வயது மூதாட்டி

நெல்லிக்குப்பம், ஏப். 19:  நெல்லிக்குப்பம் நகராட்சி எல்லைக்குட்பட்ட கீழ்பட்டாம்பாக்கம் மெயின் ரோட்டை சேர்ந்த நடேசன் மனைவி மாரியம்மாள்(104). இவரை நேரில் சந்தித்து தேர்தல் அலுவலர்கள் வாக்களிக்க வலியுறுத்தி வாக்கு சீட்டு வழங்கினர். இந்நிலையில் கீழ்பட்டாம்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்த வாக்குச் சாவடிக்கு நேற்று மதியம் மூதாட்டி மாரியம்மாவை உறவினர்கள் ஆட்டோவில் அழைத்து வந்தனர். அங்கு அவர் இருவர் உதவியுடன் வாக்களித்தார். 104 வயதில் நடக்க கூட முடியாத நிலையிலும் வாக்களிக்கும் கடமையை நிறைவேற்றிய மூதாட்டியை பொதுமக்கள் பெரிதும் பாராட்டினர்.இதுபோல் நெல்லிக்குப்பம் ஒத்தவாடியை சேர்ந்த உமர்சல்மா(98) என்பவரும் சக்கர நாற்காலியில் வந்து தனது வாக்கு உரிமையை பதிவு செய்தார்.திருமணம் முடிந்த நிலையில் மணப்பெண்கள் வாக்களிப்புவிருத்தாசலம், ஏப். 19: விருத்தாசலம் பழமலைநாதர் நகர் பகுதியில் வசிக்கும் வேல்முருகன் மகள் அமலா என்பவருக்கும், பரூர் பகுதியை சேர்ந்த சுந்தர் என்பவருக்கும் விருத்தாசலத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று திருமணம் நடந்து முடிந்தது. இதன் பின்னர் விருத்தாசலம் திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியில் உள்ள அவருடைய பகுதி வாக்குச்சாவடிக்கு மணப்பெண் அமலா வருகை புரிந்து வாக்களித்து தனது ஜனநாயக கடமையை செய்தார்.இதுபோல், விருத்தாசலம் புதுகுப்பம் பாரதி நகர் கோவிந்தராஜ்- சாந்தி மகள் தீபா என்பவரும் வயலூர் நகராட்சி துவக்கப் பள்ளியில் மணக்கோலத்தில் வாக்களித்தார்.

Related Stories: