ஜெயங்கொண்டத்தில் வேட்பாளர் அறிமுக கூட்டம் ராமதாஸ் பங்கேற்பு

ஜெயங்கொண்டம், மார்ச் 27: அதிமுக பாமக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் வாக்கு சேகரிப்பு கூட்டம் ஜெயங்கொண்டத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பாமக மாநில  செயலாளர் வைத்தி தலைமை வகித்தார்.சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரசேகர் ஆதரித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசுகையில்,  20 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட அனல் மின் திட்டத்தை வரப்போகும் மோடி ஆட்சியில் திட்டத்தை துவங்கவும் அல்லது நிலத்தை திருப்பிக் கொடுப்பதற்கு உரிய நடவடிக்கையை நாம் இணைந்து செயல்படுவோம். இந்த திட்டத்தில் இடம் நிலம் கொடுத்தவர்கள் 50 ஆண்டு காலத்திற்கு பங்குதாரர்களாகவும் வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வழங்கவும் நடவடிக்கை எடுத்து இதற்கு ஒரு தீர்வு காணப்படும்.  கும்ப கோணத்திலிருந்து விருத்தாசலத்திற்கு சிதம்பரத்திலிருந்து அரியலூர் இருக்கும் புதிய வழித்தடத்தில் ரயில் பாதையை இணைக்கவும் நடவடிக்கை மேற்கொள்வோம் என்றார். கூட்டத்தில் வேட்பாளர் சந்திரசேகரரை ஆதரித்து அதிமுக அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன், ஜெயங்கொண்டம் எம்எல்ஏ ராமஜெய லிங்கம்  உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் மாநில மாவட்ட நிர்வாகிகள் பேசினர்.

Related Stories: