வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு பயிற்சி

ஜெயங்கொண்டம், மார்ச் 27: வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கான முதல்கட்ட பயிற்சி ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது. பயிற்சியில் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் கையாளுதல், தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு நிலைய அலுவலர்கள் கவனிக்கப்பட வேண்டியது, வாக்குச்சாவடிகள் அனுமதிக்கப்படுவர் யார் யார் என்பது மற்றும் மாதிரி வாக்குப்பதிவு வாக்கு சாவடிக்குள் வாக்காளர்கள் எடுத்துச் செல்லக்கூடிய அடையாள அட்டைகள், வாக்குச்சாவடி நிலைய அலுவலர் களுக்கான பணிகள் அவர்களது பொறுப்புகள் குறித்து குறுந்தகடு மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. அரியலூர் மாவட்ட வருவாய் அலுவலர் பொற்கொடி, உடையார்பாளையம் ஆர்டிஓ ஜோதி ஆகியோர் பயிற்சி மையங்களை ஆய்வு செய்தனர். பயிற்சி பெற்ற மண்டல அலுவலர்கள் 25 பேர் அலுவலர்களுக்கு பயிற்சி அளித்தனர். இதில் 1435 ஆசிரியர்கள் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர்.  பயிற்சியில் தாசில்தார்கள் குமரையா, ராஜமூர்த்தி, கோவிந்தராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: