தேர்தல் விதி மீறல்கள் புகார் அளிக்க புதிய செயலி கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி

ஜெயங்கொண்டம் , மார்ச் 27: அரியலூர் மாவட்டத்தில் 2019 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் விதி மீறல்கள் பற்றி ஆன்லைனில் புகார் அளிக்க புதிய செயலி பற்றி விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது. அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள தத்தனூர் மீனாட்சி ராமசாமி கல்வியியல் கல்லூரியில் மாணவ, மாணவியருக்கு சிவிஐஜிஐஎல் விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் கோமதி தலைமை வகித்தார். முகாமில் 2019 நாடாளுமன்ற தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடத்திட தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதுபோல தேர்தல் நடத்தை விதிகளை மீறும் அரசியல் கட்சிகள் செயல்பாட்டை கண்காணிக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பொதுமக்களே ஆன்லைனில் புகார் தெரிவிக்க ஏதுவாக “சிவிஐஜிஐஎல்” என்ற செயலியை உருவாக்கியுள்ளது. இந்த செயலியை பொதுமக்கள் தங்களது ஆண்ட்ராய்டு போன் பிலேஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்து தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக புகார் அளிக்கலாம். இந்த புகாரை அளிக்கும் பொதுமக்களின் விபரங்கள் தேர்தல் ஆணையத்தால் பாதுகாக்கப்படும். புகார் அளிப்பவர்கள் தங்களின் விபரங்கள் ஏதுமின்றி புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரங்கங்களை புகார்களாக அளிக்கலாம். இதில் 18 வயதுக்கு மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பங்கேற்று தேர்தல் நடத்தை விதிகள் மீறல் தொடர்பாக புகார்களை அனுப்பிட ஏதுவாக இந்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமில் துணைப்பதிவாளர்கள் செல்வராஜ், சக்கரவர்த்தி மற்றும் கல்லூரி இணைச்செயலாளர் கமல்பாபு, துணை முதல்வர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related Stories: