அரியலுார் பகுதியில் நாய்கள் தொல்லையால் மக்கள் அவதி

அரியலுார்,மார்ச்27: அரியலுார் பகுதியில் தெருநாய்கள் தொல்லையால் பொதுமக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். அரியலுார் கடைவீதி பகுதியில் அதிக அளவில் தெருநாய்கள் சுற்றி வருகின்றன. அந்த நாய்கள் கடித்து பலபேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தெருநாய்கள் வெயில் காலத்தில் வெயிலின் கொடுமையால் வெறிநாயாக மாறிவிடும் சூழ்நிலை உள்ளது. வெறிநாய் கடித்தால் அவர்களை காப்பாற்றுவது பெரும்பாடு. எனவே சங்கரன் பந்தல் பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களை உடனே பிடிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. இதனால் பொதுமக்கள் நாய்களை கண்டு மிகவும் அச்சத்துடன் பரிதவித்து வருகின்றனர். இதேபோல்தான் அரியலூர் மாவட்டம் முழுவதும் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, எனவே தெருநாய்கள் அதிகளவில் சுற்றித்திரிவதால் அனைத்து நாய்களையும் பிடிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு மீண்டும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: