வெள்ளாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய 9 மாட்டு வண்டிகள் பறிமுதல்

செந்துறை, மார்ச் 27: செந்துறை அருகே வெள்ளாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய 9 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. செந்துறை அருகே செல்லும் வெள்ளாற்றில் இரவு நேரங்களில் அனுமதியின்றி மாட்டு வண்டி, லாரிகளில் மணல் அள்ளி கடத்தி வருகின்றனர். தளவாய், குவாகம், செந்துறை போலீசாரும் அவ்வபோது ஆய்வு செய்து மணல் கடத்துபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். மேலும் மணல் கடத்தலை தடுக்க தனிப்படை போலீசாரும் அமைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று சன்னாசிநல்லூர் பகுதி வெள்ளாற்றில் 20க்கும் மேற்பட்டோர் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளுவதாக தளவாய் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து வெள்ளாற்றுக்கு போலீசார் விரைந்து வந்தனர். அப்போது ஆற்றில் மணல் அள்ளி கொண்டிருந்த பொன்குடிக்காடு குமார், மதிவாணன், பொன்பரப்பி தர்மலிங்கம், சேடக்குடிக்காடு ரமேஷ், தியாகராஜன், செல்வராஜ், இலைக்கடம்பூர் சின்னதுரை, கோவிந்தசாமி உள்ளிட்ட 9 பேரின் மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்து நிலையத்துக்கு கொண்டு சென்றனர். மேலும் மாட்டு வண்டி உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: