சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் தொல்.திருமாவளவன் பேட்டி

அரியலூர்.மார்ச்26:  மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி 40 தொகுதிகளிலும்  வெற்றி  பெறும் என தொல். திருமாவளவன் கூறினார். நாடாளுமன்ற தேர்தலையடுத்து சிதம்பரம் நாடாளுமன்ற தேர்தல் அலுவலரும், அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமியிடம்  விசிக தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற வேட்பாளருமான தொல்.திருமாவளவன் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். அவருடன் அரியலூர்  திமுக  மாவட்ட செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் ராஜேந்திரன், மதிமுக மாவட்டசெயலாளர் கு.சின்னப்பா உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விசிக வேட்பாளர் தொல்.திருமாவளவன் சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட ஜெயங்கொண்டம் பகுதியில் நிலக்கரி திட்டத்தினை விரைந்து தொடங்கவும் அதிக முந்திரி சாகுபடி நிறைந்த பகுதிகளில் முந்திரி தொழிற்சாலை அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றிபெறும் என்றார்.

இதனையடுத்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக புவனகிரி,மெயின்ரோடு பூவாலையை சேர்ந்த திருசங்கு மகன் ரவி(49) இவர் அரியலூர் தேர்தல் நடத்தும் அலுவலரும் அரியலூர்  கலெக்டர் விஜயலட்சுமியிடம் மனுத்தாக்கல் செய்தார். குன்னம்,ஓகனூர் வா.உ.சி நகரை சேர்ந்த தங்கராசு மகன் கிட்டு இவர்  சுயேட்சை வேட்பாளராக  வேட்புமனு தாக்கல் செய்தார். நேற்று  விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியை சேர்ந்த ரவி என்பவர் மற்றும் சுயேட்சை வேட்பாளர் கிட்டு ஆகிய மூவருர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

Related Stories: