நெல்லையில் இருந்து ஜபல்பூருக்கு சிறப்பு ரயில் சேலம் வழியே இயக்கம்

சேலம், மார்ச் 19:  நெல்லையில் இருந்து சேலம் வழியே ஜபல்பூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.  கோடை விடுமுறையை முன்னிட்டு, பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், நெல்லையில் இருந்து ஜபல்பூருக்கு சேலம் வழியே சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படுகிறது. நெல்லை- ஜபல்பூர் (02193) இடையே ஏப்ரல் 6, 13, 20, 27, மற்றும் மே 4, 11, 18, 25, ஜூன் 1, 8, 15, 22, 29ம் தேதிகளில்  இயக்கப்படும் இந்த சிறப்பு ரயில், நெல்லையில் இருந்து மதியம் 4மணிக்கு புறப்பட்டு, 2வது நாள் காலை 11 மணிக்கு ஜபல்பூருக்கு சென்றடையும்.  இந்த சிறப்பு ரயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, நல்லூர், விஜயவாடா, வாரங்கல், நாக்பூர் வழியாக ஜபல்பூர் செல்கிறது. இதேபோல், கோவை- ஜபல்பூர்(02197) இடையே ஏப்ரல் 8, 15, 22, 29 மற்றும் மே 13, 20, 27 மற்றும் ஜூன் 3ம் தேதிகளில் இயக்கப்படும் இந்த சிறப்பு ரயில், கோவையில் இருந்து இரவு 7.05 மணிக்கு புறப்பட்டு, 2வது நாள் காலை 10.30 மணிக்கு ஜபல்பூருக்கு சென்றடைகிறது. இந்த சிறப்பு ரயில், பாலக்காடு, திருச்சூர், மங்களூர், உடுப்பி வழியாக செல்கிறது. இதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. இத்தகவலை சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories: