பெரம்பலூரில் இன்று வேட்புமனு தாக்கல் துவக்கம் வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே அனுமதி

பெரம்பலூர்,மார்ச் 19: இன்று(19ம்தேதி) மனுதாக்கல் தொடங்குகிறது. பெரம்பலூ ரில் 2இடங்களில் மனுதாக்கல் செய்யலாம். வேட்பாளருடன் கூடுதலாக 4பேர் மட்டுமே மனு தாக்கல்செய்ய அனுமதி. கண்காணிப்புக் கேமராக்களுடன் மனுதாக்கலை பதிவு செய்ய வீடியோ கேமராக்கள் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்தியத் தேர்தல்ஆணையத்தால் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து பாராளுமன்ற தொகுதிகளுக்கும் ஏப்ரல் 18ம்தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. இதனையொட்டி வேட்பு மனுதாக்கல் இன்று(19ம்தேதி) தொடங்கி வருகிற 26ம்தேதிவரை நடக்கிறது. இதன்படி மனுதாக்கல் செய்ய விரும்புவோர் 19ம் தேதி, செவ்வாய்கிழமை, 20 , 21, 22  மற்றும் 25ம்தேதி(திங்கட்கிழமை), 26ம்  தேதி (செவ்வாய்க்கிழமை) ஆகியநாட்களில் காலை 11மணிமுதல் மாலை3மணிவரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதிக்கு போட்டியிடுவோர் பெரம்பலூர் மாவட் டத் தேர்தல் நடத்தும்அலுவலரான கலெக்டர் சாந்தாவிடம் கலெக்டர் அலுவ லக முதல்தளத்திலும், முதன்மை உதவித் தேர்தல்நடத்தும் அலுவலரான (பெரம்ப லூர் சட்டமன்றத் தொகுதி) பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதனிடம் பழைய பஸ்டாண்டு ஆத்தூர் சாலையிலுள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தி லும் மனுதாக்கல் செய்யலாம்.

வேட்பாளர்களின் மனுதாக்கலையொட்டி பெரம்பலூர்  கலெக்டர் அலு வலக வராண்டாவிலும், கலெக்டர்அறைமுன்பும் சிசி டிவி கேமராக்கள் பொருத்தப்பட் டுள்ளன. மேலும் மனுதாக்கலை முழுமையாகப் பதிவுசெய்ய கலெக்டர் அறையிலும், வருவாய் கோட்டாட்சியர்அறையிலும் என 2 வீடியோ கிராபர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். கலெக்டர் அலுவலகம்முன்பு 100மீட்டர் தூரத்திற்கு முன்பாகவே வேட்பாளரோடு செல்ல தேர்தல்ஆணையர் அனுமதித்துள்ள 4பேர்தவிர இதரநபர்களை தடுத்துநிறுத்த டிஎஸ்பி தலைமையிலான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகத்திலும், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும் நோடல்ஆபீஸர் எனப்படும் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். இவர்களுக்குஅருகே வேட்பாளர் மற்றும் முன்மொழிபவர்களின் முகவரி அறியஏதுவாக பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 6சட்டமன்றத் தொகு திகளின் வாக்காளர் பட்டியல்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தேர்தல் நடத்தும்அலுவலர் மற்றும் முதன்மை உதவித் தேர்தல்நடத்தும் அலுவ லரின் அலுவலகங்களுக்குள் வேட்புமனு தாக்கல்செய்பவரோடு கூடுதலாக 4 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். வேட்புமனுவை வேட்பாளரோ அல்லது முன்மொ ழிபவரோ தாக்கல்செய்யலாம். மனுதாக்கல் செய்தபின் உறுதிமொழி எடுத்து படிவத் தில் கையொப்பம் இடவேண்டும்.

10பேர் முன்மொழிய வேண்டும்...

பதிவுசெய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட் பாளர்களை 10வாக்காளர்கள் முன்மொழிய வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற் றும் மாநிலக் கட்சிகளைச்சேர்ந்த வேட்பாளர்களை ஒரு வாக்காளர் முன்மொழிந்தால் போதுமானது. வேட்பாளர் தமிழ்நாட்டின் ஏதேனும் ஒரு சட்டப்பேரவை தொகுதியில் வாக்காளராக இருக்க வேண்டும். முன்மொழிபவர் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகு திக்குள் ஏதாவது ஒரு சட்டமன்றத் தொகுதியில் வாக்காளராக இருத்தல் வேண்டும் எனத் தேர்தல் நடத்தும் அதிகாரியான கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார்.

Related Stories: