தேர்தல் விதிமுறை அமல்படுத்துவது தொடர்பான மண்டல அலுவலர்கள் ஆலோசனைகூட்டம்

திருத்துறைப்பூண்டி, மார்ச்19: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுக்கா அலுவலகத்தில் நாகை பாராளுமன்ற தேர்தல் திருத்துறைப்பூண்டி சட்டசபை தொகுதிக்குட்பட்டபகுதியில் சட்டம் மற்றும் ஒழுங்கினை பராமரித்திடவும் எவ்விதஅசம்பாவிதசம்பவங்ளும் நிகழாதவாறு தேர்தல் நடத்திடவும் மண்டல அலுவலர்கள், காவல் துறை, வருவாய் ஆய்வாளர்கள் ஆகியோருக்கான தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்துவது தொடர்பாகஆலோசனை கூட்டம்  நடைபெற்றது.  மாவட்டவழங்கல் அலுவலர் தேர்தல் நடத்தும் துணை அலுவலர் தெய்வநாயகிதலைமை வகித்தார். தாசில்தார் ராஜன்பாபு, வட்டவழங்கல் அலுவலர் ராஜாமணி, தேர்தல் பிரிவு துணை தாசில்தார் சந்திரமோகன், டிஎஸ்பிக்கள் திருத்துறைப்பூண்டி பொன்கார்த்திக்குமார், முத்துப்பேட்டை இனிக்கோதிவ்யன் முன்னிலைவகித்தனர். கலந்தாய்வு கூட்டத்தில் தேர்தல் மண்டல அலுவலர்கள் வாக்குசாவடி தற்போதையநிலை, அடிப்படைவசதிகள் ஆய்வு விவரங்கள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பதற்றமான வாக்குசாவடி குற்றம் நடைபெறும் மையங்கள் குறித்து விவரங்கள் தெரிவிக்கப்பட்டு அந்த மையங்கள்கூடுதல் கவனம் பாதுகாப்பு செய்திட அறிவுறுத்தப்பட்டது.  மண்டல அலுவலர், வருவாய்த்துறையினர் சார்ந்த அலுவலர்கள் மற்றும் காவல் துறை அலுவலர்கள்  அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட அறிவுறுத்தப்பட்டது.

Related Stories: