அனைத்து கட்சி கூட்டத்துக்கு அதிமுகவினரை மட்டும் அழைத்த தேர்தல் ஆணையம்

சென்னை, மார்ச் 19:  அனைத்து கட்சி ஆலோசனை கூட்டத்துக்கு அதிமுகவினரை மட்டும் தேர்தல் அதிகாரிகள் அழைத்துள்ளனர்.  எதிர்க்கட்சியினருக்கு தகவல் தெரிவிக்கவில்லை. இதனால், தேர்தல் அலுவலர்கள் ஒருதலைபட்சமாக செயல்படுகிறார்களா என சமூக  ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.வரும் ஏப்ரல் 18ம் தேதி தமிழகத்துக்கான நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதைதொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு  வந்துள்ளன. இதனால் தேர்தல் ஆணையம் பறக்கும் படை அமைத்து பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.இதையொட்டி, பெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள பெரும்புதூர் ஒன்றியத்தில் அடங்கிய அனைத்து கட்சியினர் கூட்டம்  பெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் அதிமுகவினர் மட்டுமே கலந்து கொண்டனர். இதில்  அதிகாரிகள், மற்ற கட்சிகளுக்கு எவ்வித தகவலும் கொடுக்காமல், அதிமுக கட்சி நிர்வாகி

களுக்கு மட்டும் தகவல் கொடுத்து அனைத்து கட்சி கூட்டம் நடத்தியுள்ளனர்.

இதுகுறித்து எதிர்க்கட்சி நிர்வாகிகள் கூறுகையில், பெரும்புதூர் ஒன்றியத்தில் அதிமுக, திமுக, பாமக, விடுதலை சிறுத்தைகள்கட்சி , மதிமுக,  புரட்சி பாரதம், பகுஜன் சமாஜ்வாடி உள்பட பல்வேறு கட்சிகள் உள்ளன. தற்போது தேர்தல் விதிமுறைகள் குறித்த அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்  நடத்த மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இதையடுத்து, பெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் நேற்று மாலை அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. இதில் பெரும்புதூர் தொகுதி  உதவி தேர்தல் அலுவலர் சக்திவேல், தாசில்தார் காஞ்சனமாலா, துணை தாசில்தார்கள் வெங்கடேசன், ஜெய்சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.ஆனால் திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்பட பெரும்பாலான எதிர்க்கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை கூட்டம் குறித்த தகவல்  ெதரிவிக்கவில்லை. இதில், அதிமுக ஒன்றிய செயலாளர்கள் மற்றும் கட்சியினர் மட்டுமே கலந்து கொண்டனர். ஆலோசனை கூட்டத்தில் ஆளுங்கட்சியினருக்கு மட்டும் அழைப்பு விடுத்திருப்பதை பார்த்தால், தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக  செயல்படுவதாக சந்தேகம் ஏற்படுத்துகிறது என்றனர்.

Related Stories: