வண்டலூரில் பரபரப்பு மாநில வன ஆராய்ச்சி நிலையத்தை சுற்றி வந்த மர்ம ஹெலிகாப்டர்

சென்னை, மார்ச் 19: வண்டலூரில் உள்ள மாநில வன ஆராய்ச்சி நிலையத்தை மர்ம ஹெலிகாப்டர் சுற்றி வந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு சிங்கம், புலி, கரடி, யானை உள்பட பல்ேவறு அரிய வகை விலங்குகளும்,  ஏராளமான பறவைகளும் உள்ளன. இதனை காண தினமும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர். இந்த பூங்காவுக்கு எதிரே  மாநில வன ஆராய்ச்சி நிலையம் உள்ளது. இந்நிலையில் ேநற்று மதியம் சுமார் 12 மணியளவில் மர்மமாக அங்கு பறந்து வந்த ஒரு ஹெலிகாப்டர், வன ஆராய்ச்சி நிலையத்தை வட்டமிட்டபடி  சுற்றியது. மேலும்  அந்த ஹெலிகாப்டரில் இருந்து 2 கயிறுகள் மூலம் கருப்பு உடை அணிந்த 10 பேர் இறங்கினர்.

இதனை கண்டதும், அங்கிருந்த ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக, இதுபற்றி உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா்.  அதன்பேரில் அதிகாரிகள் விரைந்து வந்தனர். அதற்குள் கயிறு மூலம் இறங்கிய மர்மநபர்கள், மீண்டும் ஹெலிகாப்டரில் ஏறி அங்கிருந்து  சென்றுவிட்டனர். மேலும் நேற்று மாலை 4.30 மணியளவிலும்,  இரவு 7 மணியளவிலும் அதே ஹெலிகாப்டர் மீண்டும், மீண்டும் வந்து இறங்கியதால்  அந்த பகுதியில்  பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  இதுகுறித்து பூங்கா உயர் அதிகாரிகளிடம் கேட்டதற்கு, மர்ம ஹெலிகாப்டரில் வந்து இறங்கியவர்கள் சென்னை தாம்பரம் விமான படையில் உள்ள  அதிரடி படையினரா அல்லது தேசிய பாதுகாப்பு படையில் பயிற்சி எடுத்து வரும் அதிரடி படையினரா என விசாரித்து வருகிறோம் என்றனர்.

Related Stories: