க.பரமத்தி சத்திரத்தில் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி

க.பரமத்தி, மார்ச். 19:  க.பரமத்தி அருகே சத்திரம் நடுநிலைப்பள்ளி குறு வள மையத்திற்குட்பட்ட பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி நடைபெற்றது. ஒருங்கிணைந்த பள்ளி கல்வி இயக்கம் க.பரமத்தி வட்டார வள மையம் சார்பில் குறுவள மைய அளவிலான தொடக்க, நடுநிலை, உயர்நிலை மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் தலைமையாசிரியர், பள்ளி மேலாண்மைக்குழு தலைவி, மாற்றுதிறனாளி மாணவர்கள் பெற்றோர் என தலா 6பேருக்கு பள்ளி மேலாண்மைக்குழு குறித்த ஒரு நாள் பயிற்சி புன்னம் ஊராட்சி சத்திரம் நடுநிலைப்பள்ளி குறு வள மையத்தில் நடைபெற்றது. பயிற்சியை பள்ளி தலைமை ஆசிரியர் (பொ) முத்துலட்சுமி தலைமை வகித்தார். க.பரமத்தி வட்டார கல்வி அலுவலர் முருகன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர் கவிதா, பழமாபுரம் தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி ஆகியோர் இந்த குறு வள மையத்திற்குட்பட்ட 17பள்ளிகளில் இருந்து பங்கேற்ற சுமார் 102 பேருக்கு பள்ளி மேம்பாட்டு திட்டம், இலவச கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம், தாமான கல்வி, குழந்தையின் உரிமைகள், கல்வி சார்ந்த பிரச்னைகள், அரசின் நலத்திட்டங்கள் போன்றவைகள் குறித்து பயிற்சியில் விளக்கி எடுத்துரைத்தனர்.  பயிற்சியில் 17 பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழு தலைவி, மாற்றுதிறனாளி மாணவர்கள் பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: