ஊட்டியில் மீண்டும் குளிர்

ஊட்டி, மார்ச் 15:  ஊட்டியில் பகல் நேரத்தில் பலத்த காற்று வீசியதால், 15 நாட்களுக்கு பின் மீண்டும் நேற்று குளிர் உணரப்பட்டது. மாறுபட்ட காலநிலையால் மக்கள் அவதிக்குள்ளாகினர். நீலகிரி மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் துவங்கி நான்கு மாதத்திறகும் மேலாக கடும் உறைபனி நீடித்தது. இதனால், நாள் தோறும் கடும் குளிர் காணப்பட்டது. குறிப்பாக, ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடும் உறைபனி தாக்கம் காரணமாக பகல் நேரங்களிலேயே குளிர் வாட்டியெடுத்தது. இந்நிலையில், இம்மாதம் துவக்கம் முதல் பனி பொழிவு முற்றிலும் குறைந்து காணப்பட்டது. இதனால், சமவெளிப் பகுதிகளை போன்று கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக ஊட்டியில் பகல் நேரங்களில் காற்று வீசியதால் 15 நாட்களுக்கு பின் மீண்டும் குளிர் உணர முடிகிறது. குறிப்பாக, தாழ்வான பகுதிகள், நீர் நிலைகளை ஒட்டிய பகுதிகளில் குளிர் காற்றின் தாக்கம் அதிகமாக இருந்தது.  ேமலும், அதிகாலை நேரங்களில் நீர் பனியின் தாக்கமும் சற்று அதிகமாக காணப்பட்டதால், குளிர் வாட்டுகிறது. இந்த மாறுபட்ட காலநிலையால், பல்வேறு உடல் பிரச்னைகள் ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்தனர்.

Related Stories: