மலேசியாவுக்கு கடத்தி செல்ல முயன்ற மயில் தோகை 18 கிலோ பறிமுதல்

சென்னை, மார்ச் 15: சென்னை விமான நிலையத்தில் இருந்து மலேசியாவுக்கு கடத்தப்பட இருந்த 18 கிலோ மயில் தோகைகளை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சென்னையில் இருந்து கொழும்புக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன் விமானம் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு புறப்பட தயாரானது. இந்த விமானத்தில் செல்ல இருந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர்.அப்போது ராமநாதபுரத்தை சேர்ந்த முத்துக்கனி (36) என்பவர் கொழும்பு வழியாக மலேசிய தலைநகர் கோலாலம்பூர் செல்ல வந்திருந்தார். அவர் பெரிய அளவிலான கூடை எடுத்து வந்தார். அந்த கூடையில் பூக்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால், அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது.அந்த பயணியை தனியாக அழைத்து, அவர் கொண்டு வந்த கூடையை பிரித்து பார்த்தபோது பூக்களுக்கு அடியில் கட்டுக்கட்டாக  மயில் தோகைகள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அதில் மொத்தம் 18 கிலோ மயில் தோகைகள் இருந்தன. இதன் மதிப்பு ₹1 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.பின்னர் அதிகாரிகள் முத்துக்கனியின் பயணத்தை ரத்து செய்து, அவர் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சுங்க அதிகாரிகள்  வழக்கு பதிந்து இந்த மயில் தோகைகள் தானாக உதிர்ந்தனவா? அல்லது மயில்களை கொன்று அதில் இருந்து எடுக்கப்பட்டனவா? என விசாரணை நடத்த வனத்துறை உதவியை நாடி

யுள்ளனர்.

Related Stories: