சோழவரத்தில் 12 ரவுடிகள் கைது

புழல், மார்ச் 15: நாடாளுமன்ற தேர்தலையொட்டி சோழவரம் பகுதிகளில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 12 ரவுடிகளை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். நாடாளுமன்ற தேர்தலையொட்டி அசம்பாவிதங்கள் எதுவும் நடக்காமல் இருக்க திருவள்ளூர் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் தில்லைநடராஜன், உதவி கண்காணிப்பாளர் பவன்குமார் ஆகியோர் உத்தரவின்பேரில் சோழவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன் மற்றும் போலீசார் ஆகியோர் காந்திநகர், பெருமாள் அடிப்பாதம், அம்பேத்கர் நகர், நாகத்தம்மன் நகர், சோலையம்மன் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிரடி சோதனை செய்தனர். பின்னர் அங்கு பதுங்கி இருந்த பிரபல ரவுடிகள் 12 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் கொலை, கொள்ளை போன்ற பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்கள் என தெரியவந்தது.இதையடுத்து வியாசர்பாடியை சேர்ந்த பிரபல ரவுடிகளான மோகன்ராஜ் (24), பிரதீப் குமார் (25), ரமேஷ் (25), கலைச்செல்வன் என்கிற அப்பு (30) உள்ளிட்ட 12 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் வெளியில் இருந்தால் தேர்தல் நேரங்களில் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் என கருதியதால் போலீசார் அவர்களை கைது செய்தனர். பின்னர், பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: