திருச்சி மாவட்டத்தில் 37,249 மாணவ, மாணவிகள் எஸ்எஸ்எல்சி தேர்வு எழுதினர்

திருச்சி, மார்ச் 15:  திருச்சி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு நேற்று துவங்கியது. முதல்நாள் நடைபெற்ற தமிழ்முதல்தாள் தேர்வினை 37,249 மாணவ, மாணவிகள் எழுதியதாக கலெக்டர் சிவராசு தெரிவித்தார்.

தமிழகத்தில் 2018-19ம் கல்வி ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று (14ம் தேதி) துவங்கியது. வருகிற மார்ச் 29ம் தேதி அரசு பொதுத்தேர்வு நிறைவு பெறுகிறது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் எழுத திருச்சி கல்வி மாவட்டத்தில் 56 , மணப்பாறை கல்வி மாவட்டத்தில் 39, முசிறி கல்வி மாவட்டத்தில் 28 மற்றும் லால்குடி கல்வி மாவட்டத்தில் 36 தேர்வு மையங்கள் என மொத்தம் 159 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் லால்குடியில் 1 மையமும் , மணப்பாறையில் 3 மையங்களும் புதியதாக அமைக்கப்பட்டுள்ளன. முதல்நாள் தமிழ்முதல்தாள் தேர்வு நடைபெற்றது. திருச்சி சேவா சங்கம் பெண்கள்  மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் கலெக்டர் சிவராசு பார்வையிட்டு மாணவிகள் தேர்வு எழுதியதை ஆய்வு  செய்தார்.அப்போது கலெக்டர் கூறியதாவது: இந்த தேர்வில் திருச்சி மாவட்டத்தில் 174 அரசுப்பள்ளிகள், 30 ஆதிதிராவிட நலப்பள்ளிகள் , 75 அரசு உதவி பெறும் பள்ளிகள் , 156 மெட்ரிக் மற்றும் சுயநிதிப்பள்ளிகள் மற்றும் 6 மாநகராட்சி பள்ளிகள் என 441 பள்ளிகளைச் சார்ந்த  18,884 மாணவர்கள் , 18,365 மாணவிகள் என மொத்தம் 37,249 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.  இதில் திருச்சி கல்வி மாவட்டத்தில் 15,332, லால்குடி கல்வி மாவட்டத்தில் 8,068, மணப்பாறை கல்வி மாவட்டத்தில் 7,965  மற்றும் முசிறி கல்வி மாவட்டத்தில் 5,884 மாணவ, மாணவியர்  தேர்வு எழுதுகின்றனர்.  தேர்விற்காக 159 தேர்வு மையங்களுக்கு 159 முதன்மைக் கண்காணிப்பாளர்களும் ,159 துறை அலுவலர்களும், 2110 அறைகண்காணிப்பாளர்களும் தேர்வு பணிக்காக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேர்வில் முறைகேடுகள் நிகழாவண்ணம் கண்காணிப்பதற்காக 275 நிலையான மற்றும் பறக்கும் படை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்பல்வேறு நிலை அலுவலா–்கள் மாணவ, மாணவிகள் பொதுத்தேர்வு எழுதுவதற்கான நடவடிக்கைகளை ஒருங்கிணைந்து அனைத்து வசதிகளும் சிறப்பாக ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருட்டிணன் உடனிருந்தார்.1,234 தனித்தேர்வர்கள்

முசிறி கல்வி மாவட்டத்தில் 2 மையங்களில்  39 தனித்தேர்வர்களும், லால்குடி கல்வி மாவட்டத்தில் 2 மையங்களில் 312  தனித்தேர்வர்களும், மணப்பாறை கல்வி மாவட்டத்தில் 1 மையத்தில் 64  தனித்தேர்வர்களும் , திருச்சி கல்வி மாவட்டத்தில் 5 மையங்களில் 782  தனித்தேர்வர்களும்  மற்றும்  திருச்சி மத்திய சிறைச்சாலையில் 37  தனித்தேர்வர்களும்  தேர்வு எழுதுகிறார்கள்.

Related Stories: