மாநகராட்சியில் 13 வாக்குச்சாவடி குறைப்பு

திருச்சி: திருச்சி மாநகராட்சி உள்ளாட்சி தேர்தலுக்கான மறு வரையறையில் வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.திருச்சி  மாநகராட்சி உள்ளாட்சி தேர்தல் 2019க்கான மறுவரையறை செய்யப்பட்ட  வார்டுகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியலை மாநகராட்சி ஆணையர்  ரவிச்சந்திரன் நேற்று மாநகராட்சி மைய அலுவவலகத்தில் பொதுமக்கள்  பார்வைக்கு வெளியிட்டார்.அதன்படி மாநகராட்சி வார்டு 1 முதல் 65 வரை  மறுவரையறை செய்யப்பட்ட வார்டுகளுக்கு மொத்தம் 795 வாக்குச்சாவடிகள் உள்ளன.  வாக்காளர்கள் மொத்தம் 7,38,043 உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள்  3,58,979, பெண் வாக்காளர்கள் 3,78,984, திருநங்கைகள் 80 பேர் உள்ளனர்.  மறுவரையறைக்கு முன் 808 வாக்குச்சாவடிகள் இருந்தன. குறைந்த வாக்காளர்கள் உள்ள வாக்குச்சாவடிகள் குறைக்கப்பபட்டு ஒரு வாக்குச்சாவடிக்கு 1,400  வாக்காளர்கள் என்ற வீதத்தில் தற்போது 795 வாக்குச்சாவடிகள்  அமைக்கப்பட்டுள்ளது என ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Related Stories: