தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்கம் சார்பில் தீ தடுப்பு பாதுகாப்பு பயிற்சி ஒத்திகை

திருச்சி, மார்ச் 15: தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கம் சார்பில் கரூரில் உள்ள பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிட்.,  நிறுவனத்தில் தீ தடுப்பு பாதுகாப்பு பயிற்சி ஒத்திகை நடந்தது.

தொழிற்சாலைகள் சட்டம் மற்றும் விதிகளின்படி பேரிடர் தொழிற்சாலைகளில் ஆறு மாதத்திற்கு ஒருமுறை அவசர நேரத்தில் தீ தடுப்பு பாதுகாப்பு பயிற்சி ஒத்திகை நடத்தப்படவேண்டும்.  அதன்படி இந்த பயிற்சி ஒத்திகை கரூரில் உள்ள பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிட்., நிறுவனத்தில் நேற்று நடந்தது. பயிற்சி ஒத்திகையில் திருச்சி தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை  இயக்குனர் மாலதி, கரூர், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குனர்  சுசீலா ஆகியோர் தலைமையேற்று கலந்து கொண்டு பயிற்சி ஒத்திகையை பற்றி  ஆலோசனைகளை வழங்கினர்.  இந்த தீயணைப்பு தடுப்பு ஒத்திகையில் தொழிற்சாலை தொழிலாளர்கள் தீயணைப்புக்குழு, தீயணைப்பு உதவிக்குழு மற்றும் மருத்துவ பாதுகாப்பு குழு என மூன்று குழுக்களாகப் பிரிந்து  மற்றும் தமிழ்நாடு தீயணைப்பு நிலையத்தின் தீயணைப்பு வண்டிகள் மூலம் இந்த பயிற்சி ஒத்திகையில்  ஈடுபட்டு தீயை அணைக்கும் ஒத்திகையில் ஈடுபட்டனர்.  இந்த பயிற்சி ஒத்திகையில் டிஎன்பிஎல், ஈ.ஐ.டி பாரிஆகிய தொழிற்சாலைகளில் இருந்து மியூட்சுவல்  எய்ட் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: