21 மாத நிலுவைத் தொகை வழங்க ஓய்வூதியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

திருச்சி, மார்ச் 15: ஓய்வூதியர்களுக்கு 1.1.2016 முதல் 21 மாத நிலுவைத் தொகை வழங்க வேண்டுமென தமிழக அரசுக்கு கோரிக்கை ஓய்வூதியர் கூட்டமைப்பு கோரிக்கைவிடுத்துள்ளது.  திருச்சியில், தமிழ்நாடு அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மண்டல கருத்தரங்கம் நேற்று நடந்தது. இதில் மாவட்ட தலைவர் சிராஜுதீன் தலைமை வகித்தார். புதுகை மாவட்ட தலைவர் ஜெகநாதன், பெரம்பலூர் மாவட்ட செயலார் ஜெகநாதன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ஓய்வூதியர் கூட்டமைப்பு மாநில தலைவர் தரன் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினார்.  இதில் அரசு ஊழியர், ஆசிரியர் ஓய்வூதியர்களுக்கு 1.1.2016 முதல் 21 மாத நிலுவைத் தொகையினை வழங்க வேண்டும். போக்குவரத்து ஊழியர்களுக்கு ஓய்வுபெறும் நாளில் அனைத்து ஓய்வூதிய பலன்களையும் மாத ஓய்வூதியத்தை மாத முதல் தேதியில் வழங்க வேண்டும்.

கல்லூரி ஆசிரியர்களுக்கு யூஜிசி நிதியை மாநில அரசுக்கு மத்திய அரசு முழுமையக ஈடுசெய்ய வேண்டும், மின்வாரிய மற்றும் போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இதில் தமிழ்நாடு அரசு அனைத்துதுறை ஓய்வூதியர் சங்கம், அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு, ஓய்வு பெற்ற அனைத்து ஆசிரியர் சங்கம், மின்வாரிய ஓய்வூதியர் நல அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற நலஅமைப்பு நிர்வாகி சண்முகம் நன்றி கூறினார்.

Related Stories: