இடைப்பாடியில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசனை கூட்டம்

இடைப்பாடி, மார்ச் 15: சேலம் மேற்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஊராட்சி, வார்டு ஒருங்கிணைப்பாளர்கள் அறிமுகம் மற்றும் தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம், இடைப்பாடியில் நேற்று நடந்தது.

தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் தருண் தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு வரவேற்றார். மாவட்ட துணை செயலாளர்கள் சுந்தரம், சம்பத்குமார், நெசவாளர் அணி மாவட்ட அமைப்பாளர் ஆறுமுகம், நகர செயலாளர் பாஷா, மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர்கள் சண்முகம், செல்வராஜ், தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் குமார், முருகேசன், வேலமுரகன், நகர அவைத்தலைவர் மாதையன், மாவட்ட பிரதிநிதி சிங்காரவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  இதில் மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம் கலந்து கொண்டு பேசுகையில், ‘தகவல் தொழில்நுட்ப அணி, நகரில் இருந்து கிராம மக்கள் வரை வழிகாட்டியாக உள்ளது. மத்தியில் ராகுல்காந்தியை பிரதமராகவும், தமிழகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை முதல்வராகவும் செய்தால், மாநிலத்தில் மூடப்பட்டுள்ள அனைத்து தொழிற்சாலைகள் மீண்டும் புத்துயிர் பெறும்,’ என்றார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் சேலம், நாமக்கல், தர்மபுரி மாவட்டத்தில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் திமுக கூட்டணியை வெற்றி பெறச்செய்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மணிகண்டன் நன்றி கூறினார்.

Related Stories: