சிவா ஐஏஎஸ் அகாடமியில் காவலர் தேர்வுக்கான பயிற்சி துவக்கம்

சேலம், மார்ச் 15: சேலம் சிவா ஐஏஎஸ் அகாடமியில் எஸ்ஐ மற்றும் காவலர் தேர்வுகளுக்கான பயிற்சி துவங்கியுள்ளது. தமிழகத்தில், கடந்த வாரம் 969 எஸ்ஐகள் பணியிடங்களுக்கும், 8,888 காவலர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள், சேலம் அரசு கலைக்கல்லூரி எதிரில் செயல்பட்டு வரும் சிவா ஐஏஎஸ் அகாடமியில் துவங்க உள்ளது. இதுகுறித்து பயிற்சி மையத்தின் முதல்வர் சிவா கூறியதாவது:காவல் துறையில் சேர துடிக்கும் இளைய தலைமுறையினருக்கு ஓர் அரிய வாய்ப்பாக இத்தருணம் உள்ளது. முறையான பயிற்சியும், வழிகாட்டுதலும் இருந்தால் இத்தேர்வுகளில் எளிதில் வெற்றிபெற இயலும். இதற்கான பயிற்சி வகுப்புகள், பல ஆண்டுகள் அனுபவமுள்ள எங்கள் பயிற்சி மையத்தில் துவக்கம். எங்கள் பயிற்சி மையம், கடந்த 2016ம் ஆண்டு எஸ்ஐ தேர்வில் 52 சதவீத தேர்ச்சி மற்றும் மாநில அளவில் முதல் மதிப்பெண்ணும் பெற்றது. 2017 மற்றும் 2018ம் ஆண்டு காவலர் தேர்வில் 90 மற்றும் 92 சதவீதம் முறையே தேர்ச்சி பெற்றதோடு, மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்றும் சாதனை புரிந்துள்ளது. எனவே, இந்த அரிய வாய்ப்பினை இளைய தலைமுறையினர் பயன்படுத்திக் கொண்டு, பயன்பெற வேண்டுகிறேன்.  மேலும் விவரங்களுக்கு எங்களது பயிற்சி மையத்தை அணுகலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: