அரசு பள்ளி அருகே சட்டவிரோத கள் விற்பனை

திருச்செங்கோடு, மார்ச் 15:திருச்செங்கோடு அருகே வையப்பமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் 800க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியின் கிழக்குப்பகுதி பின்புற சாலையை ஒட்டி, சட்ட விரோதமாக கள் விற்பனை செய்யப்படுகிறது. இப்பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள் நாகர்பாளையம், மொஞ்சனூர், எருக்கலாங்காட்டுப்புதூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து இவ்வழியே நடந்தும், சைக்கிள் மூலமாகவும் பள்ளிக்கு வருகின்றனர். பள்ளியின் பின்புறத்தில் கள் விற்பனை செய்வதால், மாணவ, மாணவிகள் மிகவும் சிரமத்துடன் பள்ளிக்குச் சென்று வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘அரசு பள்ளிக்கு அருகில் கள் விற்பனை செய்யப்படுகிறது. கள் அருந்திய நபர்கள் போதையில் திண்டாடுவது, மாணவர்களை கிண்டல் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, இப்பகுதியில் கள் விற்பனையை  தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

Related Stories: