எலுமிச்சங்கிரியில் அறிவியல் ஆலோசனைக்குழு கூட்டம்

கிருஷ்ணகிரி, மார்ச் 15:  கிருஷ்ணகிரி அடுத்த எலுமிச்சங்கிரியில் அறிவியல் ஆலோசனைக் குழு கூட்டம் நடந்தது. கிருஷ்ணகிரி அருகே எலுமிச்சங்கிரி கிராமத்தில் உள்ள ஐசிஏஆர் வேளாண்மை அறிவியல் மையத்தில் அறிவியல் ஆலோசனைக்குழு கூட்டம் நடந்தது. தமிழ்நாடு கிராம வளர்ச்சி நிறுவனத்தின் தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார். அறிவியல் மையத்தின் தொழில்நுட்ப வல்லுநர்(வேளாண் விரிவாக்கம்) செந்தில்குமார் வரவேற்றார். வேளாண்மை அறிவியல் மையத்தின் முதுநிலை விஞ்ஞானியும், தலைவருமான சுந்தர்ராஜ் ஆண்டறிக்கை வாசித்தார். வேளாண் தொழில்நுட்ப பயன்பாட்டு ஆராய்ச்சி நிலையத்தின் முதன்மை விஞ்ஞானி பாஸ்கரன் விளக்கி பேசினார். அப்போது, விவசாயிகளுக்கு தேவையான பயிர் சாகுபடி தொழில்நுட்பங்களை பயிற்சிகள் மற்றும் செயல்விளக்கம் மூலம் தெரியப்படுத்தி வருமானத்தை அதிகரிக்க வேண்டுமென கூறினார். கூட்டத்தில்  பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் மையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் சண்முகம், தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் முதன்மை விஞ்ஞானி ராமஜெயம், பையூர் மண்டல ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் தமிழ்செல்வன், கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ராஜேந்திரன், தோட்டக்கலை துணை இயக்குநர் கண்ணன், கால்நடைத்துறையின் மண்டல இணை இயக்குநர் டாக்டர். மனோகரன், கோழி உற்பத்தி மற்றும் வேளாண்மைத்துறை பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் டாக்டர் சம்சுதீன், கால்நடை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர் விஜயகுமார், மண்டல ஆராய்ச்சி நிலையத்தின் பயிர் பெருக்கம் மற்றும் மரபியல் துறையின் பேராசிரியர் கீதா, தோட்டக்கலைத்துறையின் பேராசிரியர் ஜீவஜோதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) மோகன் விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.

Related Stories: