கட்டி முடித்து 4 ஆண்டுகளாகியும் காட்சி பொருளான நீர்த்தேக்கத் தொட்டி

காரிமங்கலம், மார்ச் 15: காரிமங்கலம் அருகே, மாட்லாம்பட்டியில் குடிநீர் பிரச்னையை தீர்க்கும் பொருட்டு அன்புமணி ராமதாஸ் எம்பி தொகுதி நிதியிலிருந்து 2014-15ம் ஆண்டு ₹4.5 லட்சம் மதிப்பில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது. ஆனால், பணிகள் முடிந்து 4 ஆண்டுகளாகியும், இதுவரை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை. இந்த நீர்த்தேக்க தொட்டிற்கு அருகிலேயே, ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட பிரதான குழாய் செல்லும் நிலையில், அதையும் இந்தத் தொட்டியோடு இணைக்க வேண்டுமென மக்கள் வேண்டுகோள் விடுத்தும், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்டு, 4 ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ள நீர்த்தேக்கத் தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வராவிட்டால், வரும் தேர்தலில் தக்க பாடம் புகட்டுவோம் என அப்பகுதி மக்கள் கோபத்துடன் தெரிவித்துள்ளனர்.

Related Stories: