நாடாளுமன்ற தேர்தல் எதிரொலி போலீஸ் ஸ்டேஷன்களில் மாவட்ட எஸ்பி திடீர் ஆய்வு

பாலக்கோடு, மார்ச் 15: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் எஸ்பி ராஜன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும், வாகன தணிக்கையிலும் அவர் ஈடுபட்டார். தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், 19ம் தேதி 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதி முறைகள் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், பல்வேறு பகுதிகளில் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட எஸ்பி ராஜன், கடந்த வாரம் புதியதாக நியமிக்கப்பட்டார். இவர் நேற்று முன்தினம், பென்னாகரம், ஏரியூர், பெரும்பாலை, பாலக்கோடு, மாரண்டஅள்ளி என மாவட்டம் முழுவதும் உள்ள போலீஸ் ஸ்ேடஷன்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு பதியப்படும் வழக்குகள், பதிவேடுகளை பார்வையிட்டார். இதையடுத்து காரிமங்கலம்-பாலக்கோடு ஆரதள்ளி கூட்ரோடு என்னும் இடத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது, அவ்வழியாக கிருஷ்ணகிரியில் இருந்து பாலக்கோடு நோக்கி வந்த கார்கள், மினிடெம்போக்கள் தணிக்கை செய்யப்பட்டது.  இதேபோல் தொப்பூர், காரிமங்கலம், கோபிநாதம்பட்டி, கூட்ரோடு, கிருஷ்ணாபுரம் கோட்டப்பட்டி என மாவட்டம் முழுவதும் தொடர்ந்து பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் தீவிரமாக  ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: