தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆய்வு

சென்னை: பொன்னேரி ரயில் நிலையத்தில் கட்டப்பட்டிருந்த ரயில்வே துறை அலுவலகங்கள், ரயில்வே ஊழியர்கள் குடியிருப்பு ஆகியவற்றை நேற்று  தெற்கு ரயில்வே பொது மேலாளர் குலஷேத்ரா திறந்து வைத்தார். பின்னர் ரயில் நிலையத்தில் உள்ள பயணச்சீட்டு அலுவலகம், நிலைய மேலாளர் அலுவலகம் ஆகியவற்றில் அவர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘சென்னை-கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் செல்லும் விரைவு ரயில்கள் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் நிறுத்தப்படுவது குறித்த பயணிகள் கோரிக்கை பரிசீலிக்கப்படும். அனைத்து ரயில் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. பயணச்சீட்டு அலுவலகத்தில் தமிழ் மொழி தெரியாதவர்களால் பயணிகளுக்கு ஏற்படும் பாதிப்புக்காக ஊழியர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படும்’’ என்றார்.

Related Stories: