திமுக பிரமுகர் காருக்கு தீ வைப்பு

கூடுவாஞ்சேரி, மார்ச் 15: திமுக பிரமுகரின் வீட்டில் நிறுத்தி இருந்த காருக்கு மர்மநபர்கள் தீ வைத்து எரித்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வண்டலூர் அருகே மண்ணிவாக்கம், கலைஞர் கருணாநிதி தெருவை சேர்ந்தவர் எம்.டி.சண்முகம் (62). மண்ணிவாக்கம் ஊராட்சி திமுக செயலாளராகவும், மாவட்ட பிரதிநிதியாகவும் உள்ளார். இவரது தம்பி எம்.டி.ேலாகநாதன். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். ஒரே கட்டிடத்தில், வசிக்கின்றனர். நேற்று முன்தினம் நள்ளிரவில், எம்.டி.சண்முகம் வீட்டுக்கு, ஒரே பைக்கில் 3 பேர் வந்தனர். பைக்கில் இருந்து இறங்கிய ஒருவர், அவரது வீட்டின் முன்பு வந்து நின்றார். பின்னர், கையில் வைத்திருந்த வாட்டர் கேனில் இருந்த  பெட்ரோலை வீட்டின் முன்பு நிறுப்பட்ட கார் மீது வீசி தீ வைத்தார். இதில், கார் தீ பிடித்து எரிந்தது. உடனே அவர்கள், அங்கிருந்து தப்பிவிட்டனர். தீப்பற்றிய வாடை வந்ததால், சந்தேகமடைந்த சகோதரர்கள் வெளியே வந்து பார்த்தனர். அப்போது, காரின் பின் பகுதி எரிந்து கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக அவர்கள், அக்கம்பக்கத்தினர் உதவியுடன், தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். காரின் மதிப்பு 40 லட்சம் என கூறப்படுகிறது.  தகவலறிந்து ஓட்டேரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். பின்னர், அந்த இடத்தில் உள்ள தடயங்களை சேகரித்தனர். தொடர்ந்து போலீசார், வழக்குப்பதிவு செய்து, சம்பவம் நடந்த வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். கடந்த ஒரு வாரமாக லோகநாதன், சண்முகம் ஆகியோரை தீர்த்துக்கட்ட கூலிப்படையினர் அவர்களது வீட்டை நோட்டமிட்டுள்ளனர். இதுபற்றி எஸ்பியிடம் புகார் கொடுத்துள்ளனர். அதன்பேரில், சிலரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வேளையில், இச்சம்பவம் நடந்துள்ளதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் பற்றி அறிந்ததும், திமுக காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் எம்எல்ஏ. காட்டாங்குளத்துார் ஒன்றிய செயலார் எம்.கே. தண்டபாணி, மாவட்ட இளைஞர் அமைப்பாளர் எம்கேடி. கார்த்திக் உட்பட பலர் அங்கு சென்று விசாரித்தனர்.

தேர்தலில் போட்டியின்றி தேர்வு செய்ய சதி

செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், வண்டலூர், மண்ணிவாக்கம், பொருமாட்டு நல்லூர் ஆகிய பகுதிகளில்  அடிக்கடி அரசியல்  கொலைகள் நடக்கின்றன. இங்கு நடக்கும் கொலைகளால் பொதுமக்கள் அதிர்ச்சியோடும், பீதியுடனும் வசிக்கின்றனர். இந்நிலையில், மண்ணிவாக்கம் ஊராட்சியில், மாற்று கட்சியை சேர்ந்த ஒருவரை போட்டியின்றி தேர்வு செய்வதற்காக,  திமுகவை சேர்ந்த எம்.டி. லோகநாதன் மற்றும் எம்.டி.சண்முகத்தை அச்சிறுத்தியுள்ளனர் என கூறப்படுகிறது.

Related Stories: