தேர்தல் தொடர்பான விதிமீறல் குறித்து 24 மணி நேரமும் கண்காணிப்பு குழுவிடம் புகார் தெரிவிக்கலாம் செல்போன் எண்கள் அறிவிப்பு

தஞ்சை, மார்ச் 15: தஞ்சை மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான விதிமீறல் குறித்து கண்காணிப்பு குழுவினரை தொடர்பு கொண்டு 24 மணி நேரமும் புகார் தெரிவிக்க  செல்போன் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கண்காணிப்பு குழுக்களான பறக்கும்படை குழுவினர், நிலையான கண்காணிப்பு குழுவினர், காணொளி கண்காணிப்பு குழுவினர், காணொளி பார்வையிடும் குழுவினர், செலவு கணக்கு குழு ஆகியோருக்கா பயிற்சி கூட்டம் நடந்தது. கலெக்டர் அண்ணாதுரை தலைமை வகித்து நாடாளுமன்ற தேர்தலையொட்டி அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு குழுக்களில் இடம் பெற்றுள்ள அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணியை தேர்தல் ஆணைய வழிகாட்டுதலின்படி மேற்கொள்ள வேண்டும். தேர்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்றி அமல்படுத்துதல், அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளை கண்காணித்தல், தேர்தல் தொடர்பான விதிமீறல் மற்றும் குற்றங்களை தடுத்தல் ஆகியவை குறித்து அறிவுரை வழங்கினார். இதைதொடர்ந்து கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்ததாவது: தஞ்சை மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான விதிமீறல் மற்றும் குற்றங்கள் தொடர்பான புகார்களை கண்காணிப்பு குழுவினருக்கு பொதுமக்கள் தெரிவிக்கலாம். 8 சட்டமன்றகளுக்கு தேர்தல் கண்காணிப்பு குழுக்களான பறக்கும்படை குழு, நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் காலை 6 முதல் மதியம் 2 மணி வரை 7402607368, மதியம் 2 முதல் இரவு 10 மணி வரை 9442181667, இரவு 10 முதல் காலை 6 மணி வரை 7402607347 என்ற செல்போன் எண்களில் பறக்கும்படை குழுவினரையும்,   காலை 6 முதல் மதியம் 2 மணி வரை 8220946116, மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை 7402607348, இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை 9445000291 என்ற செல்போன் எண்களில் நிலையான கண்காணிப்பு குழுவினரையும் தொடர்பு கொள்ளலாம். அதேபோல் கும்பகோணம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 7402607346, 9442524421, 8668127069 என்ற செல்போன் எண்களில் பறக்கும்படை குழுவினரையும்,   9080496856, 8838904683, 8825741976 ஆகிய எண்களில் நிலையான கண்காணிப்பு குழுவினரையும் தொடர்பு கொள்ளலாம். பாபநாசம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 9894755845, 6381563986, 9443171458 ஆகிய எண்களில் பறக்கும்படை குழுவினரையும்,   7402905672, 7402905662, 7402905661 என்ற எண்களில் நிலையான கண்காணிப்பு குழுவினரையும் தொடர்பு கொள்ளலாம். திருவையாறு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 7402607343, 9843343507, 9894653329 ஆகிய எண்களில் பறக்கும்படை குழுவினரையும்,   9080966505, 8940511249, 9894041181 ஆகிய எண்களில் நிலையான கண்காணிப்பு குழுவினரையும் தொடர்பு கொள்ளலாம்.

தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 9751976661, 7402607341, 7402702500 ஆகிய எண்களில் பறக்கும்படை குழுவினரையும்,   7402905596, 9443888613, 7402607342 ஆகிய எண்களில் நிலையான கண்காணிப்பு குழுவினரையும் தொடர்பு கொள்ளலாம். ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 7397539501, 7402703900, 7402607344 ஆகிய எண்களில் பறக்கும்படை குழுவினரையும்,   7402607345, 9944689141, 7418958546 ஆகிய எண்களில் நிலையான கண்காணிப்பு குழுவினரையும் தொடர்பு கொள்ளலாம். பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 7402607351, 9443918864, 9442520453 ஆகிய எண்களில் பறக்கும்படை குழுவினரையும்,  8838908205, 6374724803, 7402607352 ஆகிய எண்களில் நிலையான கண்காணிப்பு குழுவினரையும் தொடர்பு கொள்ளலாம். பேராவூரணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 9487159246, 7402607354, 9750191511 ஆகிய எண்களில் பறக்கும்படை குழுவினரையும், 7402607353, 7402905701, 8098701286 ஆகிய எண்களில் நிலையான கண்காணிப்பு குழுவினரையும் தொடர்பு கொள்ளலாம் என்றார். பயிற்சி கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், கஜா மறு சீரமைப்பு மற்றும் மறுவாழ்வு கூடுதல் திட்ட இயக்குனர் ராஜகோபால் சுங்காரா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் முத்துமீனாட்சி (பொது), விஜயலட்சுமி (கணக்கு) மற்றும் தேர்தல் கண்காணிப்பு குழு அலுவலர்கள் பங்கேற்றனர்.

Related Stories: