10ம் வகுப்பு பொதுத்தேர்வு தமிழ் தேர்வில் 455 பேர் ஆப்செண்ட்

விருதுநகர், மார்ச் 15: 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 14 (நேற்று) துவங்கி 29ம் தேதி வரை நடைபெறுகிறது. நேற்று நடைபெற்ற தமிழ் தேர்வில் மாவட்டத்தில் 455 பேர் தேர்வெழுதாமல் ஆப்செண்ட் ஆகியுள்ளனர்.அருப்புக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 73 பள்ளிகளைச் சேர்ந்த 4,997 மாணவ, மாணவியரும், தனித்தேர்வர்கள் 150 பேர் என 5,147 பேரில் 5,056 பேர் தேர்வெழுதினர். 91 பேர் தேர்வெழுதவில்லை.திருவில்லிபுத்தூர் கல்வி மாவட்டத்தில் 78 பள்ளிகளை சேர்ந்த 7,231 மாணவ, மாணவியரும், தனித்தேர்வர்களாக 357 பேர் என 7,588 பேரில் 7,494 பேர் தேர்வெழுதினர். 94 பேர் தேர்வெழுதவில்லை.விருதுநகர் கல்வி மாவட்டத்தில் 90 பள்ளிகளைச் சேர்ந்த 6,529 மாணவ, மாணவியரும், தனித்தேர்வர்களாக 179 பேர் என 6,708 பேரில் 6,603 பேர் தேர்வெழுதினர். 105 பேர் தேர்வெழுதவில்லை.

சிவகாசி கல்வி மாவட்டத்தில் 107 பள்ளிகளைச் சேர்ந்த 7,810 மாணவ, மாணவியரும், தனித்தேர்வர்களாக 95 பேர் என 7,905 பேரில் 7,740 பேர் தேர்வெழுதினர். 165 பேர் தேர்வெழுதவில்லை.மாவட்டத்தில் 4 கல்வி மாவட்டங்களில் 348 பள்ளிகளைச் சேர்ந்த 26,567 மாணவ, மாணவியரும், தனித்தேர்வர்களாக 781 பேர் என 27,348 பேர் தேர்வெழுத விண்ணப்பித்தனர். இவர்களில் பள்ளித்தேர்வர்கள் 26,151 பேரும், தனித்தேர்வர்கள் 742 பேர் என 26,893 பேர் தேர்வெழுதினர். பள்ளித்தேர்வர்கள் 416 பேரும், தனித்தேர்வர்கள் 39 பேர் என மொத்தம் 455 பேர் தேர்வெழுதாமல் ஆப்சென்ட் ஆகினர்.

Related Stories: