அருப்புக்கோட்டை-திருச்சுழி ரோட்டில் விஷக்குளவி கொட்டி பலர் பாதிப்பு

அருப்புக்கோட்டை, மார்ச் 15: அருப்புக்கோட்டை-திருச்சுழி ரோட்டில் உள்ள டிஆர்வி சாலை வழியாக கஞ்சநாயக்கன்பட்டி செல்லும் வழி உள்ளது. இந்த பகுதியில் தனியார் தோட்டங்கள் உள்ளன. இங்கு தனியார் தோட்டத்தில் உள்ள கிணற்றில் பொதுமக்கள் குளிப்பது வழக்கம். இந்நிலையில் நேற்று இங்குள்ள தண்ணீர் தொட்டியில் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த துரைராஜன் (75), ரெங்கநாதன் (48) ஆகியோர் குளித்துவிட்டும் மற்றும் கார்த்திக் (48), தினேஷ்குமார் (39), குமரேசன் (45) உட்பட பலர் அந்த வழியாக வந்து கொண்டிருந்தனர்.அப்போது திடீரென்று கருப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் உள்ள விஷக்குளவிகள் பெரும்படையாக வந்து இந்த பகுதியில் வந்தவர்களையும், குளித்துக்கொண்டிருந்தவர்களையும் விரட்டி விரட்டி கொட்டின. இதில் 10க்கும் மேற்பட்டவர்கள் தப்பித்து ஓடினர்.

குமரேசன் என்பவர்தான் ஓட்டி வந்த சைக்கிளை போட்டுவிட்டு ஓடிவிட்டார். விஷ குளவிகள் அதிகமாக கடித்ததால் துரைராஜன் மற்றும் ரெங்கநாதன் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.மற்றவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இந்த பகுதியில் உள்ள தனியார் தோட்டங்களைச் சேர்ந்தவர்கள் முறையாக பராமரிப்பு செய்யாததால் விஷ குளவிகள், பனை மற்றும் தென்னை மரங்களில் அதிகம் கூடு கட்டி உள்ளது. கஞ்சநாயக்கன்பட்டி மற்றும் புறநகர் பகுதிகளுக்கு செல்பவர்களுக்கு இது ஒரு மாற்றுப்பாதையாக உள்ளது.பொதுமக்கள் அதிகம் நடந்து செல்லும் இந்த பகுதியில் விஷக்குளவிகளின் திடீர் தாக்குதல் பொதுமக்களை அச்சுறுத்தியுள்ளது. எனவே இதை கட்டுப்படுத்த தனியார் தோட்டங்களை சேர்ந்தவர்கள் முன்வரவேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: