தங்கப்பழம் பாலிடெக்னிக் கல்லூரியில் வளாக தேர்வு

நெல்லை, மார்ச் 15: வாசுதேவநல்லூர் தங்கப்பழம் பாலிடெக்னிக் கல்லூரியில், 3ம் ஆண்டு பயிலும் 650 மாணவர்களுக்கு பல முன்னணி நிறுவனங்களில் இருந்து கேம்பஸ் இண்டர்வியூ (வளாக தேர்வு) நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி சென்னை போர்டு இந்தியா நிறுவனம், டவே நிறுவனம், ரைஸ்சிங் ஸ்டார் நிறுவனம் மற்றும் பிளக்ஸ்ரானிக்ஸ் நிறுவனம் சார்பில் வளாக தேர்வு நடந்தது. இந்நிறுவனங்களின் மனிதவளத்துறை அலுவலர்கள் வெங்கடேஷ், கணேஷ், அருண்பாண்டி, சுந்தர் ஆகியோர் மாணவர்களுக்கு எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வை நடத்தினர். இதில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங், ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் அன்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேசன் இன்ஜினியரிங் மாணவர்கள் 400 பேர் கலந்து கொண்டனர். 200 மாணவர்களை தேர்வு செய்யப்பட்டனர். வளாக தேர்வுக்கு தங்கப்பழம் கல்வி குழும தாளாளர் முருகேசன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் தமிழ்வீரன் முன்னிலை வகித்தார். வேலைவாய்ப்புகள் குறித்து ராஜகணபதி பேசினார். வளாக தேர்வு ஏற்பாடுகளை வேலைவாய்ப்பு அலுவலர் மற்றும் பெட்ரோ கெமிக்கல் துறை தலைவர் முருகன் செய்திருந்தார்.

Related Stories: