645 துப்பாக்கிகள் போலீசில் ஒப்படைப்பு

நெல்லை, மார்ச் 15:   தமிழகத்தில் வரும் ஏப். 18ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடக்கிறது. தேர்தல் அறிவிப்பு வெளியானதை அடுத்து நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதையடுத்து நெல்லை மாவட்டத்தில் தங்களது பாதுகாப்பிற்காக பிஸ்டல், ரிவால்வர், ரைபிள், டபுள் பேரல் உள்ளிட்ட பல வகையிலான துப்பாக்கிகள் வைத்திருப்பவர்கள் உடனடியாக அந்தந்தப் பகுதியிலுள்ள காவல் நிலையங்களில் துப்பாக்கிகளை ஒப்படைக்குமாறு கலெக்டர் ஷில்பா உத்தரவிட்டார். இதற்கான கெடு 18ம் தேதியுடன்  நிறைவடைகிறது. நெல்லை மாவட்ட காவல் துறைக்கு உட்பட்ட 63 காவல் நிலையங்களில் நேற்று இரவு வரை மொத்தம் 410 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதேபோல் மாநகரத்தில் 235 துப்பாக்கிகள் நேற்று இரவு வரை ஒப்படைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் நெல்லை மாநகரத்தில் 6 துப்பாக்கிகளும்,  மாவட்டத்தில் 114 துப்பாக்கிகளும் என மொத்தம் 120 துப்பாக்கிகள் ஒப்படைக்க வேண்டியுள்ளது. இதையடுத்து இவற்றை பெறுவதற்கான நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.

Related Stories: