பணம் டிரான்ஸ்பர் கண்காணிப்பு

சிவகங்கை, மார்ச் 15:  மக்களவை தேர்தலையொட்டி ஒரு வங்கி கணக்கில் இருந்து பலருக்கு பணம் டிரான்ஸ்பர் செய்வது கண்காணிக்கப்பட்டு வருகிறது. மக்களவை தேர்தலையொட்டி தேசிய வங்கிகளில் ரூ.10லட்சத்திற்கு மேல் எடுப்பது அல்லது பணம் செலுத்துவது, ஒரு வங்கிக் கணக்கில் இருந்து பலருக்கு பணத்தை டிரான்ஸ்பர் செய்வது உள்ளிட்ட தகவல்கள் பெறப்பட உள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் வங்கியாளர்கள் வங்கிகளுக்கு, ஏடிஎம் மையங்களுக்கு பணம் எடுத்து செல்லும் போது உரிய ஆவணங்கள், அடையாள அட்டையுடன் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வங்கி பணப்பரிமாற்றம் அனைத்தையும் எவ்வாறு கண்காணிப்பது, கூடுதல் பணப்பரிமாற்றம் குறித்து தகவல் அளிப்பது உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என வங்கியாளர்களுக்கு தேர்தல் ஆணையம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: