பொள்ளாச்சி சம்பவத்தால் பிள்ளைகள் மீது பெற்றோர் தனிக்கவனம் செலுத்துங்கள் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்

தொண்டி, மார்ச் 15: பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தமிழகத்தையே நிலை குலைய செய்துள்ளது. நூறுக்கும் மேற்பட்ட பெண்கள் ஏராளமான வீடியோக்கள் என தொடர்கதையாக உள்ளது. அரசியல் தலையீடு, பெரிய மனிதர்கள் சம்பந்தம் என அதிர்ச்சி தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது. பாதிக்கப்பட்ட அனைவரும் புகார் தெரிவிக்கவில்லை என்றாலும், அதிமானோர் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவருகிறது.வெளியூர்களில் தங்கி படிக்கும் அல்லது வேலை பார்க்கும் பெண்கள் மீது குடும்பத்தார்கள் தனி கவனம் செலுத்த வேண்டும். அவர்களின் நடவடிக்கைகளை அவ்வப்போது கண்காணிக்கவேண்டும். இதுகுறித்து பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பாதிப்பு ஏற்படுவதற்க்கு முன்பு பெண்களை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து சமூக ஆர்வலர் சாதிக் பாட்சா கூறியது, ‘பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பில் தமிழ்நாடு பின்தங்கியுள்ளது என்பது பொள்ளாச்சி சம்பவத்திலிருந்து தெரியவருகிறது. இதற்கு தக்க தண்டனை வழங்க வேண்டும். இனி மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க பெண்களிடம் விழிப்புணர்வை ஏற்ப்படுத்த வேண்டும். செல்போன் பயன்பாடு, நம்பர்கள் உறவு குறித்து சரியான புரிதலை ஏற்ப்படுத்த வேண்டும். பெண்கள் பாதுகாப்பில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்’ என்றார்.

Related Stories: