நிதி ஒதுக்கீடு இல்லாமல் நான்கு மாதமாக சம்பளமின்றி தவிக்கும் பணியாளர்கள்

சாயல்குடி, மார்ச் 15: கடலாடி, முதுகுளத்தூர் ஒன்றியத்தில், பஞ்சாயத்துகளுக்கு போதிய நிதி இல்லாததால், கிராமங்களில் அடிப்படை வசதிகள் இன்றி கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். 4 மாதமாக சம்பளமின்றி பணியாளர்களும் பரிதவித்து வருகின்

றனர்.கடலாடி ஊராட்சி ஒன்றியத்தில் 60 பஞ்சாயத்துகளில் 190க்கும் மேற்பட்ட கிராமங்களும், முதுகுளத்தூர் ஒன்றியத்தில் 48 பஞ்சாயத்துகளில் 150க்கும் மேற்பட்ட கிராமங்களும் உள்ளன. கிராமங்களில் குடிநீர், தெருவிளக்கு, சுகாதார பணிகள் உள்ளிட்ட அடிப்படை தேவைக்காக மாதந்தோறும், மத்திய அரசின் உதவியோடும், மாநில அரசு நிதி மூலமும் மாவட்ட ஊராட்சி முகமை, மாவட்ட ஊராட்சி மூலம் அனைத்து பஞ்சாயத்துகளுக்கும் போதிய நிதியை, மக்கள் தொகைக்கு ஏற்ப நிதி ஒதுக்கீடு செய்யப்படுவது வழக்கம்.

ஆனால் கடந்த நான்கு மாதங்களாக கடலாடி, முதுகுளத்தூர் ஒன்றியத்திலுள்ள பஞ்சாயத்துகளுக்கு ஒதுக்கப்படும் நிதி குறைக்கப்பட்டு, ஒதுக்கீடு செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. நிதி பற்றாகுறை ஏற்பட்டுள்ளதால் பஞ்சாயத்துகளுக்களில் பணியாற்றும் துப்புறவு பணியாளர்கள், தண்ணீர் திறப்பாளர்கள், சுகாதார பணியாளர் உள்ளிட்ட பணியாளர்களுக்கு நான்கு மாதங்களாக சம்பளம் வழங்காமல் உள்ளது.இதனால் ஊராட்சி வருகை பதிவேட்டில் கையெழுத்து மட்டும் போட்டு விட்டு, மாற்று வேலைக்கு செல்வதால், கிராமத்தில் சுகாதாரம் மற்றும் குடிநீர் பணிகள் முடங்கி வருகிறது. இதனால் சில ஊராட்சி செயலர்கள் கடன் வாங்கி, பணியாளர்களின் சம்பளத்தின் ஒரு பகுதியை வழங்கி வருவதாக கூறப்படுகிறது.

மேலும் தெருவிளக்கு பராமரிப்பு, குப்பை அகற்றுதல், குடிநீர் மராமத்து பணிகள், கழிவுநீர் செல்ல வழிவகை செய்தல், சுகாதார பணிகளை மேற்கொள்ளுதல் போன்ற அடிப்படை வசதி தேவைகள் கேள்வி குறியாகி வருகிறது.குடிநீர்த் தேக்க தொட்டிகளை குறிப்பிட்ட நாட்களுக்கு பராமரிக்காமல் இருப்பதாலும், குப்பை, கழிவுநீர் போன்றவை அகற்றப்படாமல் இருப்பதாலும் கிராம மக்களுக்கு காய்ச்சல் போன்ற தொற்று நோய்களும் வேகமாக பரவி வருகிறது. இதுபோன்று கிராமங்களில் அடிப்படை வசதிகள் இன்றி பல இன்னல்களை சந்தித்து வருவதாக கிராம மக்கள் புகார் கூறுகின்றனர்.எனவே பஞ்சாயத்துகளுக்கு வழங்கப்படும் நிதியை, நிலுவை தொகையோடு சேர்த்து விரைவாக வழங்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: