பரமக்குடியில் கஞ்சா விற்பனை படுஜோர் தடம்மாறும் பள்ளி, கல்லூரி மாணவர்கள்

பரமக்குடி, மார்ச் 15: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் சந்தைகடை, பஸ் நிலையம், ரயில்நிலையம், பெருமாள்கோவில், எமனேஸ்வரம், மணிநகர் போன்ற பகுதிகளில் பள்ளி மாணவர்களை குறிவைத்து விற்பனை படுஜோராக உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கஞ்சா போதைக்கு அடிமையாகும் சிறுவர்கள் அதிலிருந்து மீள முடியாமல் சிறு சிறு குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் பள்ளிக்கு செல்லாமல் வாரச் சந்தை, மினி விளையாட்டு அரங்கம், ரயில் நிலையம், காக்கா தோப்பு போன்ற இடங்களில் சுற்றி திரிகின்றனர்.கஞ்சா வாங்க தனது சொந்த வீட்டிலியே திருடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக பெற்றோர்களே புகார் தெரிவிக்கும் நிலையில் உள்ளனர். காசு கிடைக்கும் காலங்களில் உள்ளுர் ரவுடிகளுடன் சேர்ந்து கொள்ளை மற்றும் கொலை சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். பரமக்குடி நகர் மற்றும் தாலுகா காவல் நிலையங்களுக்கு வரும் அதிகபடியான வழக்குகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அதிக அளவில் உள்ளனர்.

இதுபோன்ற சிறுவர்களை உள்ளுர் ரவுடிகள் கஞ்சா மற்றும் குவாட்டர் பாட்டிலுக்கு அடிமையாக்கி சட்ட விரோத செயல்களுக்கு பயன்படுத்தி கொள்கின்றனர். தங்கள் செய்யும் குற்றம் என்ன என்பது தெரியாமலே ரவுகளுக்கு துணை போகின்றனர். போதை பொருள்களை உட்கொள்வதால் என்ன செய்வது என்று தெரியாது பித்துபிடித்து அலைகின்றனர்.பள்ளிகளில் சாதி ரீதியான பிரச்னையை கையில் எடுக்கும் சூழ்நிலை அதிகமாக உருவாகி வருகிறது. ஆகையால் பரமக்குடி போலீசார் இப்பிரச்னையில் உடனடியாக தலையிட்டு கஞ்சா விற்பனையை தடுக்க கடுமையான நடவடிக்கை எக்கவேண்டும், இல்லையெனில் பரமக்குடியில் குற்றச்செயல்கள் அதிகரிக்கும். ளிலிருந்து காப்பாற்றவும், பெற்றோர்களின் கண்ணீரை துடைக்கவும் பரமக்குடி போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும். இதற்கு உடனடியாக நடவடிக்கை இல்லையெனில் பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் போராட்டம் நடத்த தயாராகி வருகின்றனர்.

Related Stories: