கணித மாறிலி ‘பை’ தினம்

மதுரை, மார்ச் 15: மதுரையில் கணித மன்றம் சார்பில் கணித மாறிலியான ‘பை’ தினம் கொண்டாடப்பட்டது.கணித மாறிலியான ‘பை’ இன் இரண்டு தசம தோராய மதிப்பானது 3.14 ஆகும். எனவே, ஒவ்வொரு வருடமும் மார்ச் 14ம் தேதியை ‘பை’ நாளாக கணிதவியலாளர்கள் கொண்டாடி வருகின்றனர். நேற்று மதுரை அமெரிக்கன் கல்லூரியின் கணித மன்றம் சார்பில் இத்தினம் கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் தலைமை வகித்தார்.  கருத்தரங்கில் கணித துறைத் தலைவர்  பேராசிரியர் ஸ்டீபன், ‘பை’ இன் வரலாறு குறித்து பேசினார். தொடர்ந்து துணை தேர்வுக்  கட்டுப்பாட்டு அலுவலர் பேராசிரியர் ஸ்டாலின் குமார், கணித மன்ற மாணவ  செயலாளர் ஜெரால்டு, முதுகலை முதலாம் ஆண்டு மாணவர் ஜாஸ்பர் கிஷோர் உள்ளிட்ட  பலர் பேசினர். ஏற்பாடுகளை கணித மன்ற தலைவர் பேராசியை லூர்து இமாக்குலேட் செய்திருந்தார்.

Related Stories: