ஒட்டன்சத்திரத்தில் பருத்தி ஏலம் அமோகம்

ஒட்டன்சத்திரம், மார்ச் 15: ஒட்டன்சத்திரம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது.ஏலத்தில் தாராபுரம், திண்டுக்கல், பழநி, உடுமலை, அந்தியூர் ஆகிய பகுதிகளிலிருந்து 11 வியாபாரிகள் கலந்துகொண்டனர். ரூ.5716, ரூ.4000 ஆகிய விலைகளில் ஏலம் போனது. கீரனூர், கன்னிவாடி, மஞ்சநாயக்கன்பட்டி, போடுவார்பட்டி, விருப்பாட்சி, உசிலம்பட்டி, வடமதுரை ஆகிய பகுதிகளிலிருந்து விவசாயிகள் பருத்தியை விற்பனை செய்வதற்காக வந்திருந்தனர். திண்டுக்கல் மாவட்டத்திலேயே ஒட்டன்சத்திரத்தில் மட்டும் தான் பருத்திக்கான ஏலம் நடைபெறுகிறது. வாரந்தோறும் செவ்வாயன்று பருத்திக்கான ஏலம் நடைபெறும். இதில் விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ஜோசப்அருளானந்தம், பழனி கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் மேற்பார்வையாளர்கள் பொன்ராம், அருண்பிரகாஷ்கீதா உள்ளிட்டோர் உடன் இருந்தனர். மேலும் பருத்தி ஏலம் சம்மந்தமாக தகவல்களுக்கு ஒட்டன்சத்திரம் விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ஜோசப்அருளானந்தத்தை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

Related Stories: